வாட்ஸ் அப்பில் போன் அழைப்பு செய்யலாம்

தற்போது டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக் கொள்வதில், அதிக எண்ணிக்கையுடைய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலி, வரும் ஜூன் முதல், இணையத் தின் துணையோடு, வாய்ஸ் காலிங் எனப்படும், போன் அழைப்பினைத் தரத் திட்டமிடுகிறது. இதனால், இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்சிலோனாவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான மொபைல் கருத்தரங்கில் வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி ஜேன் கௌம் இதனைத் தெரிவித்தார்.


முதலில் கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மொபைல் சிஸ்டங்களில் இது கிடைக்கும். இதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன் மற்றும் பிளாக்பெரி இயக்கங்களில், இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.

இன்ஸ்டண்ட் மெசேஜ் வழங்குவதில், வாட்ஸ் அப் மற்ற செயலிகளைக் காட்டிலும் முன்னிலை வகிக்கிறது. இதே சேவையை வழங்கும் தென் கொரியாவின் ககோ டாக் (KakaoTalk) மற்றும் சைப்ரஸ் நாட்டின் வைப்பர் (Viber) ஆகிய செயலிகளைக் காட்டிலும் அதிகம் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் அப் செயலியே. மாதந்தோறும் ஏறத்தாழ 45 கோடி பேர் இதனைப்பயன்படுத்தி வருகின்றனர். வாய்ஸ் காலிங் வசதி தரப்படும் பட்சத்தில், பலர் வழக்கமான போன் சேவை நிறுவனங்களை ஒதுக்கித் தள்ள தொடங்கிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனென்றால், அனைவருமே இணைய இணைப்பு கொண்டுள்ளனர். வாய்ஸ் காலிங் வசதி தரப்பட்டால், அனைவரும் இதன் வழியே பேசிக் கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். இதற்கு இன்ஸ்டலேஷன் கட்டணம் மற்றும் அழைப்புக் கட்டணம் எதுவும் இருக்காது. இணைய இணைப்பிற்கான கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியதிருக்கும். அதுவும் ஏற்கனவே அனைவரிடமும் இருப்பதால், எந்த செலவும் இன்றி, உலகின் எந்த மூலையில் இருப்பவருடன் , போனில் தொடர்பு கொண்டு பேச முடியும்.

நன்றி 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS