விண்டோஸ் பைல்களை வகைப்படுத்துவது எப்படி
கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் சேரச் சேர அவற்றைத் தேடிப் பெறுவது சற்று நேரம் எடுக்கும் வேலையாக மாறிவிடுகிறது. இது சில நேரங்களில் நமக்குச் சவால் விடும் செயலாக மாறிவிடுகிறது. இந்த குறையைப் போக்கும் வகையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தன் புதிய பதிப்புகளில், பைல்களை வகைப்படுத்தி, பிரித்துப் பார்க்கும் வசதியைத் தந்து வருகிறது. இதன் மூலம் ஒரு டாகுமெண்ட் பைல் அல்லது போட்டோ, வீடியோ எனப் பிரித்துப் பார்த்து பைல்களைத் தேடலாம். பைல்களின் பெயர்களை வகைப்படுத்தியும், பைல்களை எளிதாக அறியலாம். சில வேளைகளில், பெரிய அளவில் பைல் எனத் தேடலாம். குறிப்பாக வீடியோ பைல்களை அதன் அளவைக் கொண்டு தேடி அறியலாம். அல்லது, அண்மைக் காலத்தில் எடிட் செய்யப்பட்ட பைல்கள் என்ற வகையிலும் பைல்களைத் தேடி அறியலாம்.
இந்த வகைத் தேடல்களில்தான் பைல் எக்ஸ்ப்ளோரர் (File Explorer) டூலின் வியூ மெனு (View menu) நமக்கு உதவியாய் செயல்படுகிறது. பைல் எக்ஸ்புளோரர் பைல்களின் பெயர்களை அகர வரிசையில் A to Z என அடுக்கித் தருகிறது.
பைல்களின் வகைப்படி அவற்றைக் குழுவாகப் பிரிப்பது என்றால், எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்ப்ரெட் ஷீட் பைல்கள் அனைத்தையும் தனியே எடுத்து வைக்க விரும்பினால், சில வழிகள் தற்போது தரப்பட்டுள்ளன.
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் File Explorer விண்டோவில், View > Sort by > Type எனச் செல்லவும். விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், போல்டர் விண்டோவின் காலி இடத்தில், ரைட் கிளிக் செய்து, Sort menuவில் பயன்படுத்தலாம். உங்களிடம் நிறைய போல்டர்கள் இருந்தால், முதலில் போல்டர்கள் பட்டியலிடப்படும். அதன் பின்னரே, தனித்தனியான பைல்கள் வரிசையாகக் காட்டப்படும். கீழாகச் சென்றால், HTML, text, Excel, Word, XLS, PDF, மற்றும் பிற வகைகளில் பைல்கள் வகைப்படுத்தப்படும். இந்த குழுவில் சென்று, நீங்கள் தேட வேண்டிய வகைப் பக்கம் அணுகி, உங்களுக்கு வேண்டிய பைலைப் பெறலாம்.
மீண்டும் பெயர் வரிசையில் அகர வரிசைப்படி வேண்டும் எனில், View > Sort by > Name எனச் சென்று பெறலாம்.
எனவே, அடுத்த முறை File Explorer பிரிவில் பைல்களைத் தேடுகையில் வியூ மெனு சென்று பார்க்கவும்.
நன்றி
Comments