எக்ஸெல்லில் என்டர் கீ என்ன செய்யும்

எக்ஸெல் என்டர் கீ: எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம்.


செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும். இவ்வாறு இல்லாமல், என்டர் கீ அழுத்துவதன் மூலமாக மேற்கொள்ளப்படும் பணியினை நீங்கள் விரும்பும் வகையில் மேற்கொள்ளுமாறு செய்திடலாம்.

பொதுவாக செல் ஒன்றில் டேட்டாவினை என்டர் செய்தவுடன், என்டர் கீயினை அழுத்துவது வழக்கமான வேலையாகும். அவ்வாறு செய்திடுகையில் உங்கள் விருப்பப்படி என்டர் கீக்கான பணியை நிர்ணயம் செய்திடலாம். ஒன்றுமே நடக்காத படி செய்திடலாம். அல்லது கீழே உள்ள செல்லுக்குக் கர்சர் செல்லாமல், பக்கத்தில் உள்ள செல்லுக்குச் செல்லும்படி அமைத்திடலாம்.

இதற்கான வழிகள்:

1. டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் ஆப்ஷன் டயலாக் பாக்ஸினைத் தரும்.

2. இதில் உள்ள டேப்களில் எடிட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. Move Selection After Enter என்ற வரி அருகே உள்ள செக் பாக்ஸைக் காணவும். என்டர் அழுத்திய பிறகு கர்சர் எங்கும் செல்லக் கூடாது எனில், இதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம்.

4. என்டர் அழுத்திய பின்னர், கர்சர் எங்கேனும் செல்ல வேண்டும் என எண்ணினால், டிக் அடையாளம் ஏற்படுத்திப் பின்னர் அருகே உள்ள கீழ்விரிமெனுவிற்கான அம்புக் குறியினை அழுத்தி, அதில் உள்ள கீழே, மேலே, வலது மற்றும் இடது (Down, Up, Right or Left) என உள்ளதில் எந்தப் பக்கம் கர்சர் செல்ல வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இனி நீங்கள் அமைத்தபடி, டேட்டா என்டர் செய்திடுகையில், என்டர் கீ அழுத்தும்போது, கர்சர் நகர்த்தப்படும்.

விரும்பும் எழுத்தினை நிலைப்படுத்த: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத்துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ணலாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல் தமிழ் எழுத்துக்களில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தலாம். அப்போது ஒவ்வொரு முறையும் பாண்ட் விண்டோ சென்று தமிழ் எழுத்தினை செட் செய்வது சிக்கலாக இருக்கலாம். இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் எழுத்து வகையினை நிலைத்த எழுத்தாக அமைப்பதுதான். இதனை செட் செய்திடக் கீழ்க்காணும்படி அமைத்திடுங்கள்.

1. “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

2. இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “General” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.

3. இப்போது கிடைக்கும் விண்டோவில் “Standard font” என்பதற்கு நேர் எதிராக பாண்ட் மற்றும் சைஸ் விண்டோ இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் எழுத்துவகையினைத் தேர்ந்தெடுத்து மற்றும் அதற்கான அளவினையும் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி எப்போது எக்ஸெல் ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும் காலி இடத்தில் இந்த பாண்ட் தான் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS