பைட்......பைட்.........பைட்........(எச்சரிக்கை; இது உணவைப் பற்றிய செய்தி அல்ல.........)


பென்டிரைவ் அல்லது வன்தட்டை (External hard disk) வாங்க செல்கிறீர்கள்.அதில் 2GB,4GB, 250GB, 500GB என்றெல்லாம் அளவீடுகள் இருக்கும்.நீங்கள் இந்த அளவீடுகளைப் பற்றியெல்லாம் யோசித்தது உண்டா?


கணிணி பற்றிய பரிச்சயம் இருப்போர் பலருக்கும் மெகாபைட்,ஜிகாபைட் வரைக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.ஆனால் ஏக்சாபைட்,பீட்டாபைட் எல்லாம் என்னவென்று தெரியுமா.


எனக்கு dogbite ஐ தவிர எதுவும் தெரியாது என்கிறீர்களா!!
சரி.....சரி.....இந்த அளவீடுகளைப் பற்றியும் அவற்றை கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றியும் இன்றைய தெரிந்து கொண்டேன்,பகிர்ந்து கொண்டேன்-2 (தெ.கொ,ப.கொ-2) பகுதியில் பார்க்கப் போகிறோம்.

IBM இன் அகராதியின் படி கீழ் கொடுக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

Processor or Virtual Storage    
1 Bit = Binary Digit
• 8 Bits = 1 Byte
• 1024 Bytes = 1 Kilobyte
• 1024 Kilobytes = 1 Megabyte
• 1024 Megabytes = 1 Gigabyte
• 1024 Gigabytes = 1 Terabyte
• 1024 Terabytes = 1 Petabyte
• 1024 Petabytes = 1 Exabyte
• 1024 Exabytes = 1 Zettabyte
• 1024 Zettabytes = 1 Yottabyte
• 1024 Yottabytes = 1 Brontobyte
• 1024 Brontobytes = 1 Geopbyte       

Disk Storage
• 1 Bit = Binary Digit
• 8 Bits = 1 Byte
• 1000 Bytes = 1 Kilobyte
• 1000 Kilobytes = 1 Megabyte
• 1000 Megabytes = 1 Gigabyte
• 1000 Gigabytes = 1 Terabyte
• 1000 Terabytes = 1 Petabyte
• 1000 Petabytes = 1 Exabyte
• 1000 Exabytes = 1 Zettabyte
• 1000 Zettabytes = 1 Yottabyte
• 1000 Yottabytes = 1 Brontobyte
• 1000 Brontobytes = 1 Geopbyte

(கணிணி மற்றுத் அதை சார்ந்த பொருட்கள் ( hard disk,pen drive) வாங்கும் போது
மேலே உள்ள டேபிளின் விபரங்கள் உங்களுக்கு உதவும்) 

மேற்புறம் உள்ள வற்றில் எங்கெல்லாம் 1024 என்று உள்ளதோ அது 1000 என்று கீழ்புறத்தில் இருப்பதை பாருங்கள்.உதாரணமாக virtual storage என்று வரும் போது 1 MB என்பது 1024 KB ஆகவும், Disk storage என்று வருகிற போது 1 MB என்பது 1000 KB  இருப்பதை கவனியுங்கள். 


இரண்டு விதமான திட்ட அலகுகளுமே சரிதான் என்பது கணிப்பொறி வல்லுனர்களின் வாதம்.


சரி இந்த அளவீடுகளைப் பற்றி இன்னும் விரிவாக தெரிந்து கொள்வோமா.


பிட் (Bit) : ஒரு பிட் என்பது கணிப்பொறியின் தகவல்களை அளக்கும் மிக சிறிய அளவீடு.

பைட் (Byte) : ஒரு பைட் என்பது 8 பிட்டிற்கு சமம்மாகும். 10 பைட்கள் கொண்டு ஒரு வார்த்தையும், 100 பைட்கள் கொண்டு தோராயமாக ஒரு வாக்கியத்தயும் அமைக்கலாம்.

கிலோபைட்(Kilobyte) : ஒரு கிலோபைட் என்பது தோராயமாக 1000 பைட்( மிக சரியாக சொன்னால் 1024 பைட்). ஒரு கிலோபைட்டை கொண்டு ஒரு முழு பத்தியை (paragraph)அமைக்கலாம். 100 கிலோ பைட்டை ஒரு பக்கத்திற்கு சமானமாகும்.

மெகாபைட்(Megabyte) =1000 கிலோபைட்.
சில வருடங்களுக்கு முன்பு மெகாபைட்தான் கணிப்பொறி அளவீடுகளிலேயே பெரியதாக கருதப்பட்டது. ஒரு 3 1/2 இன்ச் பிளாபி என்பது 1.44 மெகாபைட் (ஒரு சிறு புத்தகத்தை இதில் அடக்கி விடலாம்) ஒரு பதிவு தட்டு (சி.டி) என்பது 650 முதல் 700 MB ஆகும்.
இப்போது எல்லாம் ஜிகாபைட்டையும் தாண்டி சென்று கொண்டு இருக்கிறோம் என்பதே நிதர்சனம்.

ஜிகாபைட்(Gigabyte); ஒரு ஜிகாபைட் 1000 மெகாபைட்டிற்கு சமானமாகும்.
வன்தட்டின் கொள்ளவை குறிக்கும் போது ஜிகாபைட்டில் தான் குறிப்பிடுகிறோம்.ஒரு ஜிகாபைட் தோராயமாக ஆயிரம் பிளாப்பிகளுக்கு சமமானது. கிட்டதட்ட இரண்டு சி.டி இல் பதிவு செய்யும் விசயங்களை ஒரு ஜிகாபைட்டில் பதிவு செய்யலாம்.
நூலகத்தின் 0.0091 கிலோ மீட்டர் தூரத்திற்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை ஒரு ஜிகாபைட்டில் அடக்கிவிடலாம். 100 ஜிகாபைட்டில் என்பது நூலகத்தின் ஒரு தளத்தின் உள்ள அனைத்து பத்திரிக்கைகளுக்கு சமம்மாகும்.

டெராபைட் (Terabyte) = 1000 ஜிகாபைட்.
இப்போதே கணிப்பொறிகளில் வன்தட்டின் கொள்ளளவு ஒரு அல்லது இரண்டு டெராபைட் என்று வர ஆரம்பித்துவிட்டன. ஒரு  டெராபைட்டில் 300 மணி நேரம் பார்க்க கூடிய தரம் வாய்ந்த வீடியோக்களை அடக்கி விடலாம் அல்லது 300 kb உள்ள 3.6 மில்லியன் படங்களை சேர்த்து வைக்கலாம். 1000 பிரட்டானிகா என்சைக்களோப்டீயா வை அடக்கி விடலாம். பத்து டெராபைட்டில் ஒரு நூலகத்தை உள்ள அனைத்து புத்தகங்களையும் அடக்கி விடலாம்.

பீட்டாபைட்(Petabyte) = 1000 டெராபைட்.
ஒரு பீட்டபைட்டின் கொள்ளளவை கற்பனை செய்து பார்ப்பது கடினமான விஷயமே.....ம்...தோரா.....யமாக ஒரு பீட்டபைட்டில் 500 பில்லியன் அச்சிடப்பட்ட பக்கங்களின் செய்திகளை வைக்கலாம்.

ஏக்சாபைட் (Exabyte) =1000 பீட்டாபைட் அல்லது ஒரு பில்லியன் ஜிகாபைட்ஸ்.இதுவரை மனிதன் பேசிய அத்தனை வார்த்தைகளையும் ஐந்து ஏக்சாபைட்டில் வைத்து விடலாம்.

செட்டாபைட் (Zettabyte) = 1000 ஏக்சாபைட்

யோட்டபைட் (Yottabyte)=1000 செட்டாபைட். www என்று அழைக்கப்படும் World Wide Web பை இதோடு ஒப்பிடலாம்.ஏனென்றால் உலகில் உள்ள மொத்த வலைப்பதிவுகளும் சேர்த்தால் கிட்டத்தட்ட ஒரு யோட்டபைட் வரும். அதி வேகமான பிராட்பேண்ட் மூலம் ஒரு யோட்டபைட்டை தரவிறக்கம் செய்ய 11000 டிரில்லியன் (trillon) வருடங்கள் பிடிக்கும்.

ப்ரான்டோபைட் (Brontobyte) =1000 யோட்டபைட் .
ஒன்றிற்கு பிறகு 27 சைபர்களை சேர்த்தால் வருவது ஒரு ப்ரான்டோபைட்

ஜியோப்பைட் (Geopbyte) =1000 ப்ரான்டோபைட்.
ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு ஜியோப்பைட் கொள்ளளவு கொண்ட வன்தட்டை இப்போது உலகில் உள்ளவர்கள், அவர்கள் வாழும் காலத்தில் பார்க்கும் வாய்ப்பு இல்லை என்ற மட்டும் சொல்லத் தோன்றுகிறது.

இப்போது புரிந்ததா........ பைட்......பைட்......... என்றால் என்னவென்று.

Comments

Gopinath.E said…
enaku oru byte...
Unknown said…
good eve,,,,,,,,,,,,,,sir
lap la entha pendriver or m card pottalum fulla virus paravvuthu sir atukku enna panrathu
GG said…
Thank you for your kind valuable Comment PSA ANAND...! :-)
GG said…
Hi PSA Anand Best u Replace your Laptop Operating System, Then you must configure updated Antivirus on that laptop.. after u scan and access any removable device..

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?