அபாயத்தை எதிர்நோக்கி 50 கோடி கம்ப்யூட்டர்கள்


விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும், வரும் ஏப்ரல் 8 முதல் நிறுத்திக் கொள்ளப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து, தொடர்ந்து எச்சரிக்கையும் கொடுத்து வருகிறது. 

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பலரின் பிரிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கி வந்த, இயங்கிக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை முடிவுக்குக் கொண்டு வர மைக்ரோசாப்ட் பல ஆண்டுகள் முடிவெடுத்து, தற்போது அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது.

பல கணக்கெடுக்கின்படி, ஏறத்தாழ 48.8 கோடி கம்ப்யூட்டர்கள் எக்ஸ்பியில் இயங்குவதாக தெரிகிறது. மிகச் சரியாக எத்தனை கம்ப்யூட்டர்கள் என்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் மட்டுமே சொல்ல முடியும். 

இது ஒரு பெரிய எண்ணிக்கையாகத் தோன்றினாலும், அனைத்து நாடுகளிலும் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரில், இவை ஏறத்தாழ 30 சதவீதம் மட்டுமே என Net Applications என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

அப்படியானால், இவ்வளவு எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்களையா, வைரஸ்களை பரப்பும் ஹேக்கர்களின் பசிக்கு இரையாக்க மைக்ரோசாப்ட் முடிவெடுத்துள்ளது என்று பலரும் எண்ணத் தொடங்கி உள்ளனர்.

இவற்றில் 70 சதவீத கம்ப்யூட்டர்கள் சீனாவில் உள்ளன. இந்த நாட்டில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை கட்டணம் செலுத்திப் பெறாமல், நகலெடுத்துப் பதிந்து இயக்குபவர்களே அதிகம். இவர்கள் ஏற்கனவே மைக்ரோசாப்ட் வழங்கிய பாதுகாப்பு பைல்களுக்கு அப்டேட் செய்திடாமலேயே இன்னும் எக்ஸ்பியை அதன் பழைய வடிவத்திலேயே பயன்படுத்தி வருகின்றனர். 

சாப்ட்வேர் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், மைக்ரோசாப்ட் மட்டுமே அதிக காலம் தன் அப்ளிகேஷன்களைப் பாதுகாக்கும் தன்மை கொண்டதாக இயங்கி வருகிறது. எனவே, மைக்ரோசாப்ட் இத்தகைய எச்சரிக்கை வழங்குகையில், அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு இயங்குவது நம் கடமையாகிறது.

இருப்பினும் பலர் என்ன தான் நடக்கும், பார்ப்போமே? என்ற எண்ணத்தில் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து வருகின்றனர். அப்படி முடிவெடுத்து தொடர்ந்து இயக்கப் போகிறவர்கள் என்ன செய்திட வேண்டும்? 

இவர்கள் இன்னும் காத்திருக்காமல், கூடிய விரைவில் எக்ஸ்பியை நிறுத்தி, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற வேண்டும். மாறும் வரை பல பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ள வேண்டும். 

இவர்களுக்காகவே எப்-செக்யூர் என்னும் நிறுவனம் சில பயனுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளது. அவற்றைப் பெற  இந்த முகவரியில் உள்ள ஈ-புக்கை காணவும். அவற்றைச் சுருக்கமாக இங்கு காணலாம்.

1. அடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில் மைக்ரோசாப்ட் வெளியிட இருக்கும் அப்டேட் உட்பட அனைத்து அப்டேட்களையும் மேற்கொண்டு, எக்ஸ்பி சிஸ்டத்தினை அதன் இறுதி நாள் அன்று அப்டேட் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புரோகிராமினை, மாறா நிலையில் உங்கள் பிரவுசராக வைத்திருந்தால், உடனடியாக அதனை நீக்கி, அதற்குப் பதிலாக, கூகுள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரை அமைத்து இயக்கவும்.

3. மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2003க்கும் சப்போர்ட் பைல்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது. அதனையோ, அல்லது அதற்குப் பின்னர் வந்த ஆபீஸ் தொகுப்பினையோ பயன்படுத்திக் கொண்டிருந்தால், உடனடியாக அவற்றையும் அப்டேட் செய்திடவும். 

4.பயன்படுத்தாத எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். அழித்துவிடவும். குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்பியுடன் இணைந்து கொடுக்கப்பட்ட அனைத்து சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களையும் நீக்கிவிடவும்.

5. ஜாவா உங்களுக்குக் கட்டாயம் தேவை என்றால் மட்டுமே, கம்ப்யூட்டரில் வைத்திருக்கவும். இல்லை எனில், உடனே நீக்கிவிடவும்.

6. ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் இணைந்த அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். இவை இரண்டும் தேவை.

7. முடிந்தால், இணைய இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை நீக்கிவிடவும். பயன்படுத்துவதாக இருந்தால், நல்ல பயர்வால் ஒன்றை அமைக்கவும்.

8. பாதுகாப்பு எதற்கு தேவை? என அலட்சியமாக இருக்க வேண்டாம். வைரஸ் பாதித்தால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.

9. எப்போதும் உங்கள் கம்ப்யூட்டரில் உருவாக்கப்படும் பைல்களுக்கு பேக் அப் தினந்தோறும் எடுத்து வைக்கவும்.

10. எக்ஸ்பியை விடுத்து, அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குச் செல்வதான திட்டத்தினை வரையறை செய்து, தயாராக வைக்கவும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மைக்ரோசாப்ட் முகவரியில் உள்ள தளத்தில் தந்துள்ள வழிமுறைகளைப் படித்து அதன்படி செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.

நன்றி

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS