எச்சரிக்கை: புதிய பேஸ்புக் வைரஸ்

இணையப்
பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனம் ஒன்று, புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக்
வழியாகப் பரவி வருவதாகச் சென்ற வாரம் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே
பேஸ்புக் தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டினைத் திறந்து வைத்து இயங்கும்
நபர்களின் கம்ப்யூட்டரை இது தாக்குகிறது. ஒரு இமேஜ் பைல் போல மெசேஜ்
அனுப்பப்படுகிறது.
உண்மையில் அது இமேஜ் அல்ல. இதில் கிளிக் செய்தால், .scr என்ற துணைப் பெயருடன் கூடிய பைல் ஒன்று உள்ளது.
இதில் கிளிக் செய்தவுடன் ZeuS crimeware என்ற வகை வைரஸ் ஒன்று உள்ளே நுழைகிறது.
தற்போது இது Win32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure: Trojan.Win32.Generic ஆகிய வைரஸ்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Comments