நவீன ஆடியோ தொழில்நுட்பத்துடன் வரும் புதிய ஆசஸ் லேப்டாப்!

 
கணினி மற்றும் நோட்புக்குகளைத் தயாரிப்பதில் ஆசஸ் நிறுவனம் தனி முத்திரையைப் பதித்திருக்கிறது. மேலும் தனக்கென்று உலகச் சந்தையில் ஒரு கெட்டியான இடத்தைத் தக்கவைத்திருக்கிறது. தற்போது ஆசஸ் நிறுவனம் ஆசஸ் ஸென்புக் யுஎக்ஸ்31இ என்ற புதிய லேப்டாப்பை அமர்க்களமாகக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய லேப்டாப் எல்லாவித சிறப்பு அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

இந்த ஸென்புக் 64-பிட் விண்டோஸ் 7 இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இன்டல் க்யுஎஸ்67 எக்ஸ்ப்ரஸ் சிப்செட்டையும் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளேயைப் பார்த்தால் அது 1600 x 900 பிக்சல்கள் கொண்டு 13.3 இன்ச் அளவுடன் வருகிறது. க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இந்த லேப்டாப் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 3000 இன்டக்ரேட்டட் க்ராபிக்ஸ் கார்டையும் கொண்டுள்ளது. அதுபோல் 2 இன் 1 கார்டு ரீடரும் இந்த லேப்டாப்பில் உண்டு.

இந்த ஸென்புக் லேப்டாப்பின் மொத்த எடை 1.3 கிலோவாகும். இதன் மொத்த பரப்பு 32.5 x 22.3 x 0.3 செமீ ஆகும். மேலும் இந்த லேப்டாப் 2 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. இதன் ரேம் 4ஜிபி கொண்ட 1333 ஹெர்டஸ் டிடிஆர்3 எஸ்டிஆர்எஎம் வகையைச் சேர்ந்தது ஆகும். இதன் பாலிமர் பேட்டரி 50 வாட்ஸ் நேரத்தைக் கொண்டது.

இணைப்பு வசதிக்காக வைஃபை, ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி இணைப்பு ஆகியவைற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸென்புக் லேப்டாப்பின் ப்ராசஸர் இன்டல் கோர் ஐ5 அல்லது ஐ7 ஆகும். இதன் ஹார்டு டிரைவ் 256 ஜிபி சக்தியைக் கொண்டது. மேலும் இந்த லேப்டாப் மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், மினி விஜிஏ மற்றும் எர்த்நெட் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது.

இந்த ஆசஸ் சென்புக் யுஎக்ஸ்31இ மிகவும் ஸ்டைலாக இருக்கிறது. முன்புறம் 3மிமீ மற்றும் பக்கவாட்டில் 9மிமீ அளவும் கொண்டு மெல்லிய ரேசர் வளைவுகளைக் கொண்டிருக்கிறது.

பக்காவான ஒலி அமைப்பிற்காக இந்த லேப்டாப்பில் சோனிக் மாஸ்டர் தொழில் நுட்பம் உள்ளது. அதனால் இதன் ஒலி அமைப்பு அதிரடியாக இருக்கும். இந்த லேப்டாப்பின் செயல் திறன் உண்மையாகவே அமர்க்களமாக இருக்கும். மேலும் இது ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே மேம்படுத்தப்பட்ட எல்இடி பேக்லைட் தொழில் நுட்பத்தை வழங்குகிறது.

இந்த ஸென்புக் லேப்டாப் அலுமினியத் தகட்டால் செய்யப்பட்டு பார்ப்பவரைக் கவரும் வகையில் இருக்கிறது. இதன் விலையைப் பார்த்தால் ரூ.75,000ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க