எப்படி விண்டோஸ் 7 மற்றும் XP கணணிகளை தானாக Shutdown செய்ய வைப்பது

இரவு வேளையில் அதிகமான நேரங்கள் வேலை செய்பவராக நீங்கள் இருந்தால், வேலை முடிந்து படுக்கைக்கு செல்லும் போது அதிகமான நேரங்களில் உங்களது கணணியை Shutdown செய்வதற்கு மறந்திருப்பிர்கள். காலையில் எழுந்து பார்ப்பீர்கள் கணணி இரவு முழுவதும் ON செய்திருப்பத்தை. இந்த சந்தர்ப்பங்களை நீக்குவதற்கும் ஒரு வழி உண்டு. அது என்ன என்பதை இனி பார்ப்போம். முதலாவதாக விண்டோஸ் 7 யில் எவ்வாறு கணணியை தானாக Shutdown செய்வது என பார்ப்போம்.
முதல் செய்முறையாக விண்டோஸ் 7 யில் கணணியை Shutdown செய்வதற்கு task scheduler றை கட்டமைப்போம். 

விண்டோஸ் 7  யில், ஸ்டார்ட் மெனுவில் உள்ள தேடுதல் பெட்டியில் (search box) “task scheduler” என டைப் செய்து திறவுங்கள்.
Task Scheduler திறந்த பின்னர் வலது பக்கம் உள்ள பகுதியில் “Create Task” என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் புதிய Task யை உருவாக்கிக்கொள்ளலாம்.
பின்னர் Task பெயரையும், “Run with highest privileges” என்ற சரிபார்க்கும் (check box) பெட்டியை தெரிவுசெய்க, இந்த செயல்பாடு நிர்வாகியின் சலுகைக்காக (administrative privilege) எதிர்பாகப்படுகின்றது. 
இப்போது திரையில் அருகில் உள்ள trigger தாவலுக்கு (tab) தெரிவுசெய்து அங்கே "New" யை தெரிவு செய்க. இனி "Daily" என்பதை கிளிக் செய்து, பணியை ஆரம்பிக்கும் நேரத்தை உங்களுக்கு ஏற்ற மாதிரி அமைக்க. 
அடுத்த படியாக trigger க்கு அருகாமையில் உள்ள “Actions” பட்டிக்கு (tab) மாறுங்கள், அங்கே “New” என்றதை அழுத்தியவுடன் ஒரு “New Action” திரை திறக்கும். அதில் கிழே “Program/script” படிமத்தில் “shutdown” (மேற்கோள் இல்லாமல்) என எழுதுங்கள். அடுத்ததாக “Add arguments” படிமத்தில் /S என எழுதுக. தேவை என்றால் மாத்திரம் Start in (optional) படிமத்தில் /F என டைப் செய்க. இந்த செய்முறை எதற்கு என்றால் கணணி Shutdown பண்ணும்போது, அப்போது கணணியில் வேலை செய்யும் அனைத்து applicationsம் உடனடியாக நிறுத்தப்படும். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் வேண்டும் என்றால் மாத்திரம் Start in (optional) படிமத்தில் /F என டைப் செய்யுங்கள். 
அடுத்ததாக “Condition” பட்டிக்கு (tab) க்கு மாறுங்கள், அங்கே சரிபார்க்கும் பெட்டியில் (check box) start the task only if computer is idle for: X நிமிடங்கள் /மணித்தியாலங்கள், stop if the computer ceases to be idle, restart if the idle state resumes என்பனவற்றை தெரிவு செய்க. இந்த பணிகள்,  கணணி AC power இருக்கும் பொழுது மாத்திரம் ஆரம்பிக்க வேண்டும், நிறுத்தும் பொழுது battery power மாற வேண்டும் என்பதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.   
இறுதியாக “Setting” (tab ) க்கு மாறுங்கள், அங்கே கிழே படத்தில் காட்டப்பட்டவாறு சரிபார்க்கும் பெட்டியை (check box) தெரிவு செய்யுங்கள்.
விண்டோஸ் 7 யில் கணணியை Shutdown செய்வதற்கு task scheduler றை கட்டமைத்து முடிந்தது. விண்டோஸ் 7 Operating system பயன்படுத்துபவர்கள் இந்த படிமுறைகளை சரியாக வாசித்து செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?