புதிய தொழில்நுட்பத்துடன் வரும் நோவா-7 டேப்லெட்!
அடுத்த
புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் மார்க்கெட்டை கலக்க களமிறங்க இருக்கிறது.
நோவோ-7 என்ற அந்த புதிய டேப்லெட் கூகுள் ஆன்ட்ராய்டு வி4.0 ஐஸ் க்ரீம்
சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும். இந்த டேப்லெட் இன்டக்ரேட்டட்
கலிபோர்னியன் எம்ஐபிஎஸ் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த நோவா7
கூகுளின் ஆன்டி ரூபினால் சான்று பெற்றதாகும்.
இந்த நோவோ-7 ஏஆர்எம் ஐசிஎஸ் ஸ்லேட் அல்லாத
இன்டகிரேட்டட் எம்ஐபிஎஸ் எஸ்ஒசி தொழில் நுட்பம் கொண்டு 7 இன்ச் திரையைக்
கொண்டுள்ளது. இது எக்ஸ்பர்ஸ்ட் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன்
செயல்திறனும் வேகமும் தாறுமாறாக இருக்கும். அதுபோல் இது மிகவும் சக்தி
வாய்ந்த விவின்ட்இ ஜிசி860 ஜிபியு கொண்டுள்ளது.
இந்த ஜிசி860 ஜிபியு இந்த நோவா7ல்
முழுமையான் எச்டி 1080பி வீடியோவையும் அதுபோல் எச்டி வீடியோ
விளையாட்டுகளையும் வழங்குகிறது. அதுபோல் 3டி வீடியோ கேமையும் இது
வழங்குகிறது. இதன் எம்ஐபிஎஸ் தொழில் நுட்பம் இதற்கு அபாரமான சக்தியை
வழங்குகிறது.
இது ரியர் மற்றும் முகப்பு கேமராக்களைக்
கொண்டிருந்தாலும் இதன் ரியர் கேமரா 2 மெகா பிக்ஸல் ஆகும். அதனால் இது சற்று
குறைபாடாக தெரிகிறது. நோவா7 மைக்ரோ எஸ்டி கார்டுகளையும் சப்போர்ட்
செய்கிறது.
இந்த நோவா7 டேப்லெட்டில் 7 இன்ச்
கெப்பாசிட்டிவ் தொடுதிரை, எச்டி சப்போர்ட் மற்றும் 3டி கேமிங்கை சப்போர்ட்
செய்யும் ஜிபியு, எம்ஐபிஎஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய வலிமை வாய்ந்த
ப்ராசஸர், இன்டகிரேட்டட் ஐசிஎஸ் ஸ்லாட், ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ்
இயங்கு தளம் மற்றும் இதன் நியாமயமான விலை ஆகியவை இதன் வலிமையாக கூறலாம்
இதன் குறைபாடு என்று பார்த்தால் இது 2
கேமராக்கள் மற்றும் இதன் உறுதியற்ற பேனல்களை கூறலாம். குறைகளும் நிறைகளும்
இந்த நோவா7ல் இருந்தாலும் இது கூகுளின் ஆன்டி ரூபினால் பாராட்டு
பெற்றுள்ளதால் இது மக்களைக் கவரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதன் மற்ற வசதிகள் பற்றிய தகவல்கள்
இன்னும் வெளிவரவில்லை. இதன் 7 மணி நேர வெப் ப்ரவுசிங் நேரத்தையும் அதே
நேரத்தில் 6 மணி நேர கேமிங் நேரத்தையும் கொண்டுள்ளது. இதன் விலை
அறிவிக்கப்படவில்லை என்றாலும் இது மலிவு விலையில் வரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
Comments