கூகுளில் சில மேஜிக் வார்த்தைகள் [Let it Snow, Tilt, Hanukkah, Do a Barrel roll]

தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன. இந்த வார்த்தைகளை  கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் Easter Eggs என அழைக்கப்படுகிறது. இன்று சில வார்த்தைகளை கொடுத்து கூகுள் தளத்தை மாற்றி பார்க்கலாம் வாருங்கள்.
  • Let it Snow
  • Tilt
  • Do a Barrel Roll
  • Hanukkah
இந்த நான்கு வார்த்தைகளும் மேஜிக் வார்த்தைகள் இவைகளை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்தால் என்ன ஆகும் என பார்ப்போம். 

Let it Snow
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உறுவாக்கியுள்ளது.

Tilt
இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ கீழே படத்தில் இருப்பது போல ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.

Do a Barrel Roll
 இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.


Hanukkah
இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சதிரதினால் ஆன ஒரு வரி காணப்படும். 




இந்த செய்தியை கீழே சமூக தளங்களில் உள்ள உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க