விக்கிபீடியாவில் ஒவ்வொரு நொடிக்கும் என்ன நடக்கிறது என நேரடியாக காண - Wiki Stream

விக்கிபீடியா என்பதற்கு பதில் தகவல்களின் களஞ்சியம் என்று இந்த தளத்தை கூறலாம். நமக்கு எதை பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமானால் இணையத்தில் வேறெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்திற்கு சென்று தேடினால் நிச்சயம் அதற்க்கான பதில் கிடைக்கும். இந்த விக்கிபீடியா தளம் பல மொழிகளில் தகவல்களை வழங்குகிறது. ஒவ்வொரு நிமிடதிறக்கும் பல நூற்றுகணக்கான புதிய தகவல்கள் பதிவேற்றப்படுகிறது. இந்த விக்கிபீடியா தளத்தில் ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கிறது. என்னென்ன புதிய தகவல்கள் பகிரப்படுகிறது என அறிய வேண்டுமா பதிவை தொடருங்கள்.
இதற்க்கு Wikistream என்ற ஒரு புதிய தளம் உள்ளது. இந்த தளத்திற்கு சென்றால் விக்கிபீடியா தளத்தில் என்னென்ன புதியதாக பதிவேற்ற படுகிறது என்பதை அதற்க்கான லிங்க்கோடு காட்டுகிறது இந்த தளம். 
இந்த தளத்தில் விக்கிபீடியா அனைத்து மொழிகளிலும் புதியதாக என்ன பதிவேற்றி உள்ளது என காட்டி கொண்டே இருக்கும். அந்த லிங்கில் கிளிக் செய்தால் அதற்க்கான விக்கிபீடியா பதிவு திறக்கும். 
மற்றும் இதில் குறிப்பிட்ட ஒரு மொழியில் வெளியாகும் புதிய பதிவுகளை மட்டும் பார்க்க விரும்பினால் இடது ஓரத்தில் உள்ள All wikipedias என்பதை கிளிக் செய்து குறிபிட்ட மொழியை தேர்வு செய்தால் அந்த மொழியில் வெளியாகவும் புதிய பதிவுகளை மட்டும் காணலாம். 
தொடர்ந்து விக்கிபீடியா படிப்போம் புதியப்புதிய தகவல்களை அறிந்து கொள்வோம். 
இந்த தளத்திற்கு செல்ல - Wikistream

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?