எவ்வாறு Virtual PC யை பயன்படுத்தி Virtual Machineனுள் விண்டோஸ் 7யை நிறுவுதல்.


இன்றைய பதிவானது முந்தய பதிவின் தொடர்ச்சியாக இடப்படுகின்றது. இந்த செய்முறையை செவ்வனே செய்வதற்கு நீங்கள் முதல் இங்கு சென்று Virtual PC யை பயன்படுத்தி எவ்வாறு விண்டோஸ் 7 யில் Virtual Machine உருவாக்குவது என்பதை அறிந்துவிட்டு வாருங்கள். இப்படி செய்வதனால் நீங்கள் இன்னும் இலகுவாக இந்த பதிவை விளங்கிக்கொள்வீர்கள்.

இந்த செய்முறையை ஆரம்பிப்பதற்கு முதலில் உங்களது Virtual Machines கோப்புறையை (Folder) திறந்துகொள்ளுங்கள். அங்கே நீங்கள் உருவாக்கிய புதிய virtual machine காண்பீர்கள். அதன் மேல் கேசறை வைத்து right click கை அழுத்தி Settings என்பதை தெரிவு செய்யுங்கள்.



















இப்பொழுது உங்களுடைய Windows 7 installation DVD யை கணணியில் ஏற்றுங்கள் (Load). பின்பு கிழே படத்தில் காட்டப்பட்டவாறு DVD drive யையும் Access a physical drive யையும் தெரிவு செய்யுங்கள்.























அல்லது உங்களுடைய கணணியில் ISO கோப்பு (File) கொண்ட installation DVD இருக்கும் என்றால் அந்த கோப்பை நீங்கள் பயன்படுத்தலாம். இது இன்னும் இலகுவான வழி.























அடுத்த கட்டமாக உங்களது installation யை தெரிவுசெய்த பின்பு, இரு தடவை உங்கள் கேசறை (Double Click) virtual machine ன் மேலே அழுத்துங்கள். அதன் பிறகு அது தானாகவே ஸ்டார்ட் ஆகிவிடும், உங்களுடைய installation கோப்புக்களையும் ஏற்றிக்கொள்ளும்.
























Installation கோப்புக்கள் ஏற்றப்பட்ட பிறகு, உங்களுடைய மொழி விருப்புக்களை (language options) கட்டமைக்க (configure) வேண்டும்.




























எப்போழுது நீங்கள் கேசறை virtual machine திரையில் அழுத்தும் பொழுது, உங்களுடைய Mouse virtual machine ஆள் கைப்பற்றப்பட்டதாக (captured) உங்களுக்கு தெரியபடுத்தும். அதோடு மட்டும் இல்லாது operating system த்தில் இருந்து இப்படி மீள கேசறை வெளியே எடுப்பது என்றும் அது காட்டும்.

இப்பொழுது நீங்கள் Install now என்பதை அழுத்துக. 
நீங்கள் இப்பொழுது தெரிவுசெய்ய வேண்டும், custom installation செய்வதா அல்லது   upgrade செய்வதா என்பதை நீங்கள் உங்களுக்கு ஏற்றாப்போல் தெரிவு செய்துகொள்ளவேண்டும். முதல் நிறுவிய operating systems உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் Custom என்பதை தெரிவு செய்யலாம். 
Virtual machine யை எந்த drive நிறுவவேண்டும் என்பதை தெரிவுசெய்து கொள்ளுங்கள். Advanced configuration settings உங்களுக்கு தேவை என்றால் Drive options யை தெரிவு செய்து கொள்ளுங்கள். 
Drive options மெனுவில் நீங்கள் formatting the drive, creating or deleting partitions, change the partition size, etc.. என்ற பல விருப்புக்களை காணலாம். அதில் உங்களுக்கு தேவையானதை தெரிவுசெய்து நிறுவிக்கொள்ளலாம்.
நீங்கள் next பொத்தானை அழுத்தியதும் நிறுவல் தொழில்ப்பாடு ஆரம்பித்துவிடும்.

நிறுவல் தொழில்ப்பாடு முடிந்த பிறகு, உங்களுடைய virtual machine முதல் முறையாக ஆரம்பித்துவிடும்.























Operating சிஸ்டம் ஏற்றப்பட்டதன் பிற்பாடு, நீங்கள் திரையின் மேலே ஒரு toolbar யை காணுவீர்கள். அந்த Tool யை தெரிவுசெய்து Install Integration Components என்பதை அழுத்துங்கள்.


























கிழே படத்தில் காட்டப்பட்டவாறு அது உங்களிடம் Integration Components யை நிறுவச்சொல்லி கேட்கும்.

நீங்கள் continue பொத்தானை அழுத்தியதும் திரையில் virtual DVD drive திறக்கும், அதில் run the setup file என்பதை தெரிவுசெய்க. 
அதை தொடர்ந்து Integration Components wizard திரையில் தோன்றும், தொடர்ந்து அது virtual machine உடனும் உங்களது operating சிஸ்டம் உடனும்  ஒருங்கினைந்துவிடும்.
கிழே உள்ள படத்தில் நீங்கள் integration components நிறுவப்படுவதை பார்பீர்கள். Virtual pc உங்களது devices அடையாளம் கண்டுகொள்ளும், அதனுடன் சேர்த்து drivers யையும் நிறுவிக்கொள்ளும்.

தொடர்ந்து அது உங்களது கணணியை மீள் அர்ரம்பிக்கச்சொல்லி கேட்கும். நீங்கள் Yes என்பதை கொடுத்து தொடர விடுங்கள்.























கணணி மீள ஆரம்பித்த பிறகு Integration Components தானாக இது அக்டிவே ஆகாது. அதையும் நீங்கள் தான் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் Toolsக்கு சென்று அங்கு Enable Integration Features யை கொடுங்கள்.























Enable Integration க்கு பிறகு நீங்கள் திரையில் புதிய USB menu வில் operating system த்தில் எல்லா devices ம் தொடர்வுபட்டு இருப்பதை காணலாம்.
























அதோடு நீங்கள் Full Screen option யையும் திரையில் காணலாம்.
























முடிந்தது இனிதே..இதை செய்து பாருங்கள் கணனியில் பயின்ற புதிய அனுபவம் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க