இலவச பி.டி.எப். (PDF) புரோகிராம்கள்

அடோப்
நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட்
(PDFPortable Document Format)டில் பைல் ஒன்றை உருவாக்குவது அவ்வளவு
எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச்
செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும்.
இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப். புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த புரோகிராம்களை இங்கு காணலாம்.
பி.டி.எப்.
பார்மட், பல ஆண்டுகளுக்கு முன்பு, அடோப் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது.
உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுவதற்கு அதன்
சிறப்பியல்புகளே காரணம். ஒரிஜினல் டாகுமெண்ட்டின் அனைத்து சிறப்பு
இயல்புகள், பார்மட்டிங் அம்சங்கள் அனைத்தும் பி.டி.எப். பார்மட்டிலும்
அப்படியே காட்டப்படுகிறது.
டெக்ஸ்ட்,
இமேஜ், மல்ட்டிமீடியா மற்றும் பல அம்சங்கள் பி.டி.எப். பார்மட்டிலும்
உயிரோட்டத்துடன் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பாஸ்வேர்ட்
கொண்டு ஒரு பி.டி.எப். பைலை பாதுகாக்கலாம். எந்த ஒரு ஆப்பரேட்டிங்
சிஸ்டத்திலும் இந்த பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலைக் காண முடியும். இந்த
பைல்களைக் காட்டி எடிட் செய்திட வழி தரும் ஆறு இலவச புரோகிராம்களை இங்கு
காணலாம்.
1. பி.டி.எப். எடிட் (PDF Edit):
இது
ஒரு ஓப்பன் சோர்ஸ் மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் புரோகிராம்.
டாகுமெண்ட் ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த
மாற்றங்களுடன் பைலை சேவ் செய்திடவும் இந்த புரோகிராம் வழி தருகிறது. இந்த
தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் கிராபிகல் யூசர்
இன்டர்பேஸ் (GUI Graphical User Interface) வசதியைப் பயன்படுத்தி,
பி.டி.எப். ஆப்ஜக்ட்களை யும் மாற்றி அமைக்கலாம்.
இந்த புரோகிராமினை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயக்கலாம். இதனைப் பெற http://sourceforge.net/ projects/pdfedit என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
2. ஓப்பன் ஆபீஸ் (Open Office):
பி.டி.எப்.
எடிட்டிங் புரோகிராம்கள் குறித்துக் காண்கையில் ஓப்பன் ஆபீஸ்
புரோகிராமினையும் இணைத்துப் பார்க்கலாம். Writer, Calc, Impress, Draw,
Base and Math என இதில் ஆறு வகை வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் ரைட்டர் டூல்
மூலமாக டாகுமெண்ட்களை உருவாக்கி, பி.டி.எப். பார்மட்டிற்குக் கொண்டு
செல்லலாம்.
இதன்
மூலம் பி.டி.எப். பைல் களை எடிட் செய்திட முடியாது. இதில் சில ஆட் ஆன்
தொகுப்புகளைக் கொண்டு வந்து மற்ற வசதிகளையும் மேற்கொள்ளலாம்.
இணையத்தில்
செயல்படும் எடிட்டர்கள்: சில பி.டி.எப். எடிட்டர்களை இணைய இணைப்பில்
இயக்கி, டாகுமெண்ட் களைத் தயார் செய்திடலாம். அவற்றில் சிலவற்றை இங்கு
காணலாம்.
3. பி.டி.எப். வியூ (PDFVue):
தற்போது சோதனைப் பதிப்பாக நமக்கு இணைய வெளியில் கிடைக்கும் பி.டி.எப். எடிட்டர் இது. இதனை https://docq.com/landing/ pdfvue
என்னும் முகவரியில் பெறலாம். தற்போது ஒரு பி.டி.எப். டாகுமெண்ட்டை
படிப்பது, கமெண்ட் எழுதுவது, குறிப்புகளை இணைப்பது, பக்கங்களை நீக்குவது
அல்லது மாற்றுவது, நிரப்ப வேண்டிய டிஜிட்டல் படிவங்களை இணைப்பது போன்ற
செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம்.
இன்டர்நெட்
எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்கள் மூலம் இதனை அணுகிப்
பெறலாம். பி.டி.எப். டாகுமெண்ட்களை நேரடியாக இந்த தளத்திற்கு அப்லோட்
செய்திடலாம்.
இதில்
உருவாக்கப்படும் எந்த ஒரு பி.டி.எப். டாகுமெண்ட்டையும் டவுண்லோட் செய்து
பிற பி.டி.எப். எடிட்டர்களில் படிக்கலாம். இந்த எடிட்டருடன் கிடைக்கும்
deskPDF என்ற புரோகிராம் மூலம், அச்சிடக் கூடிய எந்த ஒரு பைலையும் இதற்கு
அப்லோட் செய்து அதனை பி.டி.எப். பைலாக அச்சிட மாற்றலாம்.
4. பி.டி.எப். எஸ்கேப் (PDFescape):
http://www.pdfescape.com
என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் இந்த புரோகிராமில் ரீடர்,
எடிட்டர், பில்லர், டிசைனர் மற்றும் அன்னோடேட்டர் (eader, editor, filler,
designer, and annotator) ஆகியவை தரப்படுகின்றன. இதன் மூலம் டெக்ஸ்ட்,
இமேஜ் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை இணைக்கலாம்.
இங்கு
உருவாக்கப்படும் பி.டி.எப். பைல்களை, அனுமதி பெறாதவர்கள் படிக்க இயலாதபடி
என்கிரிப்ட் செய்திடலாம்; பாஸ்வேர்ட் கொடுக்கலாம். ஜாவா ஸ்கிரிப்டில்
இயங்கும் எந்த பிரவுசர் மூலமாகவும்(எ.கா.Internet Explorer, Firefox,
Safari, Chrome மற்றும் Opera) இதனை இணையத்தில் இருந்தபடியே இயக்கலாம்.
5. எக்ஸ்பர்ட் பி.டி.எப். எடிட்டர் (Expert PDF Editor):
இந்த
பி.டி.எப். எடிட்டர் ஏறத்தாழ மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பு போலவே
யூசர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது. இதனால், இதில் இயங்குவது மிக எளிதாகவும்
மனதிற்கு நிறைவாகவும் உள்ளது. இதில் பி.டி.எப். டாகுமெண்ட்களை படிக்கலாம்,
திருத்தலாம் மற்றும் அச்சிடலாம்.
பி.டி.எப்.
பைலுடன் அதன் உறுதித் தன்மையை அமைத்திட டிஜிட்டல் சர்டிபிகேட் இணைக்கலாம்.
பல பைல்களை ஒன்றாக்கலாம்; வெட்டி, ஒட்டி புதிய பைலாக இணைக்கலாம். இதன்
எளிய தொகுப்பினை சோதனைத் தொகுப்பாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
கூடுதலாக, மேம்பட்ட வசதிகள் வேண்டும் எனில் கட்டணம் செலுத்திப் பெறலாம்.
இந்த எடிட்டர் கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.visagesoft.com /products/pdfeditor
பொதுவாக
பி.டி.எப். டாகுமெண்ட்கள் பதிப்பிக்க மற்றும் அச்சிடும் நோக்கங்களுடன்
உருவாக்கப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட பி.டி.எப். புரோகிராம்கள் அனைத்துமே
இவற்றிற்கும் மேலாக நமக்குப் பணியாற்றுகின்றன.
இவற்றிலிருந்து எது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயலாற்றுகிறதோ அதனை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத் தலாம்.
Comments