எம்.எஸ். ஆபீஸ் குறுக்கு வழி கட்டளைகள்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளி -கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
வேர்ட் தொகுப்பு:
Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.
Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய இடைக்கோட்டினை அமைக்கிறது. இதனால் ஹைபன் அமைக்கப்பட்ட இரு சொற்களும் பிரிக்கப்பட மாட்டா.
Ctrl + T: பாராக்களை ஒரு ஹேங்கிங் இன்டென்ட் எனப்படும் முன் இடைவெளியிட்டு அமைக்கிறது.
Ctrl + Shift + T: மேலே சொன்ன பாரா ஹேங்கிங் இன்டென்ட் இருப்பின் அதனை நீக்குகிறது.
எக்ஸெல் தொகுப்பு:
Shift + F11 : அப்போதைய ஒர்க் புக்கில் புதிய ஒர்க் ஷீட் ஒன்றை இணைக்கிறது.
Alt + Shift + F1 : மேலே சொன்ன அதே வேலையை மேற்கொள்கிது. ஆம், இந்த இரண்டு ஷார்ட்கட் கீகளும் ஒரே வேலையைச் செய்கின்றன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.
அவுட்லுக்:
Ctrl + Shift + H: கர்சருக்கு வலது பக்கம் உள்ள சொல்லை அழிக்கிறது.
Ctrl + F: தேர்ந்தெடுத்த மெசேஜை பார்வேர்ட் செய்கிறது.
Ctrl + Alt + F: தேர்ந்தெடுத்த மெசேஜை ஒரு அட்டாச்மெண்ட் ஆக அனுப்புகிறது.
Ctrl + R: தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜுக்கு பதில் அனுப்புகிறது.
Ctrl + Shift + R: தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜுக்கு பதிலை அனைவருக்கும் அனுப்புகிறது.
நன்றி
Comments