பிடிஎப் பைலில் உள்ள புகைப்படங்களை பிரித்தெடுக்கலாமா..?
சில முக்கியமான பைல்கள், புத்தகங்கள், குறிப்புகள் பிடிஎப் வடிவில இருக்கும். அதில் உள்ள படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். ஒன்றிரண்டு படங்கள் தேவைப்பட்டால் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். புத்தகத்தில் உள்ள அனைத்துபடங்களும் தேவையென்றால் அதற்கு காலதாமதம் ஏற்படும். அவ்வாறு படங்களை மட்டும் விரைந்து பதிவிறக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 MB கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான இடத்தினை தேர்வு செய்ததும் உங்களுக்கான படம் உள்ள பக்கத்தினையோ அல்லது முழு புத்தகத்தினையோ தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தேவையான ஆப்ஷன்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் தேர்வு செய்யும் படம் எந்த பார்மெட்டில் தேவையோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அனைத்து பணிகளும் முடிந்ததும இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
இறுதியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தால் பிடிஎப் பைலில் உள்ள உங்களுக்கான புகைப்படங்கள் அனைத்தும் இருப்பதை காணலாம். இது டிரையல் விஷன் பிடித்திருந்தால் வாங்கிகொள்ளுங்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
Comments