"நமோ” ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்

 
இந்தியாவில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனமான இன்னவோஷன் (Innovazion)தன்னுடைய புதிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் சுருக்க பெயரில் நமோ ('NaMo')ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளது. 
 
 இந்த தொகுப்பு பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு வைரஸ் தொகுப்புகளுக்கான எதிரான இலவச பாதுகாப்பினை வழங்கும். இந்த தொகுப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வழங்கப்படும். தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர்களுக்கும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த தொகுப்புகள் உருவாக்கப்படும். இவை தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் எனவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்தியா மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. ஆனால், நமக்குக் கிடைத்த புள்ளி விபரங்களின் அடிப்படையில், 13 சதவீதப் பயனாளர்களே, கட்டணம் செலுத்தி வைரஸ்களுக்கு எதிரான தொகுப்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 30 சதவீத்தினர், சோதனைத் தொகுப்பினை அடுத்தடுத்து பதிந்து பயன்படுத்தி வருகின்றனர் என இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் தெரிவித்துள்ளார்.

மீதம் இருக்கின்ற 57% பேர் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி இணையத்தை அணுகுகின்றனர். இவர்களை இலக்காகக் கொண்டு நமோ ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது பிரதம மந்திரியின் பெயர்ச் சுருக்கத்தினைக் கொண்டு அழைக்கப்பட்டாலும், நிறுவனம் எந்தவிதமான அரசியல் கட்சியையும் சார்ந்து இயங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனை, புதிய அரசினைப் பாராட்டும் வகையில் பெயரிட்டுள்ளோம் என்றும் கூறினார்.

இந்த தொகுப்பு, கம்ப்யூட்டர்களைப் பாதிக்கும் வைரஸ்களைக் கண்டறிகிறது. வழக்கமான ஸ்கேனிங் மற்றும் கண்டறிதலை மேற்கொள்கிறது. ஹார்ட் டிஸ்க்கில் குறைந்த இடமே எடுத்துக் கொண்டு செயல்படுகிறது.

2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்னவோஷன் நிறுவனம் தற்போது இந்தியா உட்பட ஏழு நாடுகளில் தன் தொகுப்புகளைச் சந்தைப்படுத்துகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா, ரொமானியா, சீனா மற்றும் சிங்கப்பூரில் 500 வல்லுநர்களுடன் செயல்பட்டு வருகிறது.

மற்ற வர்த்தகப் பிரிவுகள் மூலம் ஆண்டுக்கு 1.6 கோடி டாலர் வருமானம் ஈட்டுவதாகவும், நமோ ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு, மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பினைப் பெறவும், கூடுதல் தகவல்களுக்கும் https://www.namoav.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?