கணனி பற்றி அறிய ஆர்வமா
Mother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட். இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் 0அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன.
Hard Disk : (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.
Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.
Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.
நன்றி
Comments