உறவுகளை சிதைக்கும் பேஸ்புக்


 
 
 
பல சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களால் பல உறவுகள் வீழ்ச்சியடைகிறது. ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் போன்ற தளத்தில் உள்ள
நண்பர்கள் என்று வரும் போது சில ஆண்களும், பெண்களும் எந்த ஒரு வரம்பையும் நிர்ணயித்து கொள்வதில்லை.

சில நேரங்களில் ஃபேஸ்புக்கில் நடக்கும் ஏமாற்று வேலைகளை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதற்கு காரணம் தங்களின் மனைவியிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று அவர்கள் செயல்படுவதால் தான்.

எனவே உங்கள் காதலன்/ கணவர் ஃபேஸ்புக்கில் யாரையாவது ஏமாற்றுகிறாரா என்பதை கண்டுப்பிடிக்க சில அறிகுறிகள் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.

• உங்கள் துணை எப்போது பார்த்தாலும் ஃபேஸ்புக்கே கதியென இருக்கிறாரா? அப்படியானால் ஏதோ வில்லங்கம் இருக்கிறது. இதுவே ஃபேஸ்புக் மூலமாக ஏமாற்றுவதற்கான முதல் அறிகுறியாகும்.

• ஃபேஸ்புக் தவிர அவர் மனதில் எதுவும் ஓடாமல், எப்போது பார்த்தாலும் அதனை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாரா? அப்படியானால் அவர் உங்களை கண்டிப்பாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

• உங்கள் கணவர் எப்போது பார்த்தாலும் தன் படங்களை FB-யில் மாற்றிக் கொண்டே இருக்கிறாரா? ஃபேஸ்புக் மூலமாக ஏமாற்றுவதற்கான பொதுவான அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும்.

• உங்கள் துணையின் கைப்பேசியை நீங்கள் எடுக்க முயற்சித்தால், அவர் கண்களில் டென்ஷனை காண முடிகிறதா? ஆம் எனில், அவர் உங்களிடம் மறைக்கும் ஏதோ ஒரு விஷயம் உள்ளது.

• உங்கள் கணவர் பல FB கணக்குகளை உருவாக்கி வைத்திருப்பது இயல்பான ஒரு விஷயம் அல்ல. கண்டிப்பாக அது உங்களை ஏமாற்றும் வேலையே. ஃபேஸ்புக் பயன்படுத்தி உங்களை உங்கள் துணை ஏமாற்றுகிறாரா என்பதை கண்டுபிடிப்பதற்கான வழிகளில் இதுவும் ஒன்று.

• உங்கள் கணவர் வேறு சில ஆண்கள் அல்லது பெண்களுடன் நெருக்கமான பல படங்களை FB-யில் பார்க்க நேரலாம். இதுவும் கூட நீங்கள் ஏமாறுவதற்கான அறிகுறியே.

• உங்கள் கணவரின் நண்பர்கள் பட்டியல் FB-யில் மறைக்கப்பட்டிருக்கிறதா? அவரின் உண்மையான நண்பர்கள் யார் என உங்களுக்கு தெரிவதில்லையா? அப்படியானால் நீங்கள் ஏமாறுவதற்கான அறிகுறிகளில் இதுவும் ஒன்றே.
 
நன்றி

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?