பேஸ்புக்கில் புத்தம் புது வசதி அறிமுகம்
பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் அதன் யூசர்களை விளம்பரதாரர்களுடன் இணைக்க உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோரின் வசதிக்காக,புதிய பட்டன் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டனை கிளிக் செய்த உடன் பிராண்ட் விளம்பரதாரருக்கு அழைப்பு சென்றுவிடும், பின்னர் அவர்களிடமிருந்து மறு அழைப்பு பெறுவதற்காக ஒரு புதிய வகை சோதனையில் இணையதள சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மறு அழைப்பு பெறும்போது ஷாப்பிங் தள்ளுபடி பற்றிய அனைத்து தகவல்களையும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆடியோவின் மூலம் வழங்குகிறது. இதனை 'மிஸ்டு கால்' விளம்பரம் என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் சோதனையிட்டு பின்னர் மற்ற சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பேஸ்புக் யூசர்கள் உள்ளதால், இந்த மிஸ்டு கால் விளம்பர சேவையை அறிமுகப்படுத்தி பேஸ்புக் நிறவனத்தின் ஒட்டுமொத்த வருவாயை அதிகரிக்க பிரேசில், இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த விளம்பர சேவையை சோதனையிட உள்ளது. பேஸ்புக்கில் 84% ல் 1.28 பில்லியன் பயனர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு வெளியில் இருந்து பயன்படுத்தும் பயனாளிகள் ஆவர். ஆனால் சர்வதேச சந்தைகளில் பேஸ்புக் பயன்படுத்தும் யூசர்களின் சராசரி வருவாய் அமெரிக்கா மற்றும் கனடாவை விட கணிசமாக குறைவாக உள்ளது.
நன்றி
Comments