விண்டோஸ் 8ல் தொடு உணர் திரை இயக்கத்தை நிறுத்த வேண்டுமா


 
 
விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், பல நேரங்களில், அதன் தொடு உணர் திரை இயக்கத்தை நிறுத்தி, மவுஸ் மற்றும் கீ போர்ட் வழியாக இயக்க விரும்புவார்கள். ஆனால், டச் ஸ்கிரீன் இயக்கத்தினை நிறுத்தி வைக்க, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் எந்த விதமான வசதியும் செய்து தரப்படவில்லை. ஆனால், சில செயல்முறை வழிகளை மேற்கொள்வதன் மூலம், இதனை மேற்கொள்ளலாம்.

1. "Charm Menu” வினைத் திறந்து, "Device Manager” தேடவும். கிடைக்கவில்லை என்றால், தேடலுக்கான சொல்லை "Settings” என அமைக்கவும்.

2. டிவைஸ் மேனேஜர் கிடைத்தவுடன், உங்கள் கம்ப்யூட்டரின் பெயர் கூறும் டேப்பினை விரிக்கவும். இங்கு "Human Interface Devices” என்பதனைக் கண்டறிந்து அதனை விரிக்கவும்.

3. இப்போது பல "HID compliant device” பட்டியலிடப் பட்டிருப்பதனைக் காணலாம். சில கம்ப்யூட்டர்கள், இதனை HID Compliant Touch Screen என பெயரிட்டிருப்பதனைக் காணலாம். டச் ஸ்கிரீன் ஆப்ஷன் இருப்பது கிடைக்கவில்லை எனில், ஒவ்வொரு HID Compliantபிரிவிலும் பார்க்கவும். ஏதாவது ஒன்றில் இது கிடைக்கும். அதில், விசை இயக்கத்தினை நிறுத்தி வைக்க விரும்புகிறீர்களா? என்று ஆப்ஷன் கிடைக்கும்போது "yes” என்பதனை அழுத்தவும்.

அவ்வளவுதான்! உங்கள் கம்ப்யூட்டரின் தொடு உணர் திரை இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும். மீண்டும் வேண்டும் என்றால், முன்பு கூறியபடி சென்று மாற்றவும். "enable” என்பதனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தொடு உணர் திரை இயக்கத்தினை மீண்டும் பெறலாம். ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இந்த இயக்கத்தினை நிறுத்திய பின்னர், நீங்கள் மவுஸ் மற்றும் கீ போர்ட் மூலமே இயக்கத்தினை மேற்கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?