விண்டோஸ் XPயிலிருந்து விண்டோஸ் 7 மாற வேண்டுமா..?
விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் பைல்கள் இனி கட்டாயமாக நிறுத்தப்படும் என, அதற்கான நாளை (ஏப்ரல் 8) மைக்ரோசாப்ட் அறிவித்ததிலிருந்து, பல எக்ஸ்பி வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 7க்கு மாறி வருகின்றனர். இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் இடையே பல வேறுபாடுகளை அவற்றின் செயல்பாட்டில் காணலாம். இவற்றைப் புரிந்து கொண்டால், சிஸ்டம் மாறுவது எந்த பிரச்னையையும் தராது. மேலும், வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால், இயக்குவது எளிமையாகவும், கூடுதல் பலன்களைத் தருவதாகவும் அமையும். விண்டோஸ் 7 மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலிருந்து மாறுபாடுகள் கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 13 ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்த எக்ஸ்பியுடன் ஒப்பிடுகையில், அதிக வேறுபாடுகளைக் காணலாம். இருப்பினும், எக்ஸ்பிக்குப் பின்னால், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வியுடன் பார்த்தால், விண்டோஸ் 7 ஒரு பயனுள்ள சிஸ்டமாகவே இருக்கிறது. கூடுதல் பாதுகாப்பு, நவீன தொழில் நுட்பத்துடன் இணைந்த செயல்பாடு, கூடுதல் சக்தி என இதனைச் சுருக்கமாகக் கூறலாம். இவற்றைத் தரும் சில அம்சங்களை இங்கு காணலாம். 1. டாஸ்க