இலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line Application


ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம்.

Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line Application உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த Application ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.


நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி ரெகார்ட் செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.

இது எல்லா Smartphone க்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும். உங்கள் போனில் இதை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு call செய்யலாம்.

இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி Social Network போல இயங்கும்.

இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line – ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள்:
  • இலவசமாக Call செய்யும் வசதி.
  • மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் Call/Message சென்றடைகிறது.
  • Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
  • Group Chat வசதி
  • கணினிகளிலும் இயங்கும் வசதி
  • முழுக்க முழுக்க இலவசம்.


Android பயனர்கள்:


முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Sign in ஆகி இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து Sign in செய்து பின்னர் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் போனில் GPRS/Wifi – ஐ Enable செய்தால் App தானாக Download ஆகிவிடும். உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆன பிறகு உங்கள் நம்பர் கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொள்ளலாம்.

Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:

உங்கள் போனில் App Market சென்று Line என்று தேடி டவுன்லோட் செய்யுங்கள் பின்னர் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து Register செய்யுங்கள்.

தரவிறக்க:
மொபைல்
  • Android [**Android பயனர்கள்இந்த இணைப்பில் கிளிக் செய்து வரும் பக்கத்தில் Install என்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் போனில் GPRS/Wifi - ஐ Enable செய்து தானாக Download செய்யலாம்**]
  • iPhone
  • Windows Phone 8
  • Blackberry
  • Nokia Asha
கணினி

டவுன்லோட் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம்.

Comments

Unknown said…
gud news fr me/...
GG said…
Thank you for ur visiting for my blog machi...! Give ur kind co-operation & valuable comment to maintain this blog... Thank you Balu...!

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க