இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்றலமா..?

சான்றிதழ்கள், புத்தகங்கள் நகலெடுத்து (Scan) தனித்தனி இமேஜ் பைலாக வைத்திருப்போம். மேலும் இதுபோன்று முக்கியமான பைல்களை பிரதியெடுத்து இமேஜ் பைலாக வைத்திருப்போம். அவை அனைத்தையும் ஒரே பைலாக ஒன்றினைக்க வேண்டுமெனில் நாம் அந்த இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்றினால் மட்டுமே முடியும். இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.
அப்ளிகேஷனை தரவிறக்க சுட்டி 

அப்ளிகேஷனை சுட்டியில் குறிபிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து படத்தினை தேர்வு செய்து பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ளவும்.

Setting பொத்தானை அழுத்தி Security Settings எனும் டேப்பினை பாஸ்வேர்டு உள்ளிட்டு இறுதியாக Convert Now பொத்தானை அழுத்தவும். தற்போது பாஸ்வேர்டு குறிப்பிட்ட பிடிஎப் பைலிற்கு பாஸ்வேர்டு உள்ளிடப்பட்டு இருக்கும். மேலும் குறிப்பிட்ட பிடிஎப் பைலிற்கு வாட்டர்மார்க் இட்டுக்கொள்ளவும் முடியும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?