ஹார்டு ட்ரைவ் ஐகான்களை மாற்றலமா...?

ஹார்டு டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்போம், விண்டோஸ் இயங்குதளத்தில் C,D,E,F என வரிசையாக ட்ரைவ்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த ட்ரைவ் ஐகான்களை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். ட்ரைவ்களுக்கு எவ்வாறு பெயரினை மாற்றியமைத்து வைத்துக்கொள்கிறமோ அதே போல் ட்ரைவ் ஐகான்களையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு இலவச மென்பொருள் ஒன்று வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை சுட்டியில் குறிபிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் குறிப்பிட்ட ட்ரைவினை தேர்வு செய்து பின் Install என்னும் பொத்தானை அழுத்தவும். பின் குறிபிட்ட ஐகானை தேர்வு செய்யவும். ட்ரைவ் ஐகான் மாற்றப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி தோன்றும்.
இப்போது மைகம்ப்யூட்டரை திறந்து பார்த்தால் ட்ரைவ் ஐகான்கள் மாற்றப்பட்டு இருக்கும். சில நேரங்களில் நீங்கள் குறிப்பிட்டவாறு ஐகான்கள் மாற்றமடையவில்லையெனில் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து பின் திறக்கவும் அப்போது ட்ரைவ் ஐகான்கள் மாற்றப்பட்டு இருக்கும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் விண்டோஸ் 7,8 மற்றும் 8.1 ற்கும் பொருந்தும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க