வெப்-கேம் மூலம் வீடியோ ரெக்கார்டிங் செய்யலாமா?

பெரும்பாலானவர்களுக்கு தங்களுடைய கணினியில் உள்ள வெப்கேம் மூலம் ரெக்கார்ட் செய்வது எப்படி என்பதை தெரிவதில்லை.

வீடியோ ரெக்கார்டிங் என்ற ஆப்சனை அதில் உள்ளதா என்பதே ஒரு சிலருக்கு சந்தேகமாக உள்ளது.

சிலருக்கு வெப்கேம் மூலம் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும் என்பது தெரிந்திருந்தும் அதைப் பயன்படுத்தாமலேயே இருந்திருப்பார்கள்.


திடீரென ஒரு வீடியோ ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்ற சூழல் ஏற்படும்பொழுது அந்த வசதியைப் பயன்படுத்துவதில் சந்தேகம் சிக்கல்கள் எழும். இது இயல்பானதுதான்.

மிக எளிதாக வெப் கேம் மூலம் வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம். வீடியோ ரெக்கார்ட் செய்வதற்கு சில வழிகள் உள்ளது.

அவற்றில் இரண்டு வழிமுறைகளை இப்பதிவின் ஊடாக கற்றுக்கொள்வோம்.

எப்படி வெப்கேம் மூலம் வீடியோ ரெக்கார்ட் செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வெப்கேம் மூலம் வீடியோ ரெக்கார்ட் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியது ஒரு வெப் கேமரா .. ஒரு கணினி..

1. விண்டோஸ் மூவி மேக்கர் மூலம்..

விண்டோஸ் மூவி மேக்கர் என்பது விண்டோஸ் கணனியுடன் இணைத்துக் கொடுக்கப்படும் புரோகிராம் ஆகும். இதன் மூலம் உங்களுக்கு வேண்டிய படங்களை வைத்து ஒரு மூவி தயாரித்துவிடலாம்..அல்லது வெப்கேம் மூலம் நேரடியாக விடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதியும் உள்ளது.



  • விண்டோஸ் மூவி மேக்கரை திறந்துகொள்ளுங்கள்.
  • அதில் Webcam video என்ற வசதி இருக்கும்.
  • அதைக் கிளிக் செய்துகொள்ளுங்கள்.
  • சிவப்பு நிறத்தில் உள்ள ரெக்கார்ட் பட்டனை அழுத்துங்கள்.
  • இப்பொழுது உங்களுடைய வீடியோ ரெக்கார்ட் ஆகும்.
  • நீல நிறத்தில் பட்டனை அழுத்துவதன் மூலம் ரெக்கார்டிங்கை நிறுத்தலாம்.
  • நிறுத்தியவுடன் தானாகவே சேமிக்க கூடிய வசதி தோன்றும்.
  • விருப்பமான பெயர் கொடுத்து வீடியோவை சேமித்துவிடுங்கள்.
  • சேமிக்கப்பட்ட வீடியோ My Video போல்டரில் சேமிக்கப்படும்.
மீண்டும் மூவிமேக்கரை திறக்கும்போது டைம்லைனில் நீங்கள் ஏற்கனவே சேமித்த வீடியோக்களைக் காட்டும்.

வீடியோவை உங்களுக்கு வேண்டிய பார்மட்டிலும் சேமித்துக்கொள்ள முடியும்.

2. வீடியோ கேப்சர் சாப்ட்வேர் மூலம் ரெக்கார்ட் செய்வது:

இணையத்தில் நிறைய வெப்கேம் வீடியோ ரெக்கார்டிங் சாப்ட்வேர்கள் கிடைக்கின்றன.

அவற்றுள் நான் பயன்படுத்தும் ஒரு சாப்ட்வேர் NCH Software வழங்கும் Debut வீடியோ ரெக்கார்டிங் மென்பொருள்.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தியும் எளிதாக வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.

http://www.008soft.com/products/images/webcam-capture-recorder.JPG


இந்த மென்பொருளைப் பயன்படுத்தி என்னென்ன செய்ய முடியும்?

  • நேரடியாக உங்கள் ஹார்ட்வேர் சாதனத்திலிருந்தே வீடியோ ரெக்கார்ட் செய்ய முடியும்.
  • avi, wmv, flv, mpg, mp4 போன்ற புத்தம் புதிய வீடியோ பார்மட்களில் வீடியோ ரெக்கார்ட் செய்யும் வசதி..
  • வெப் கேம் மூலம் வீடியோ ரெக்கார்ட் செய்யும் வசதி..
  • நெட்வொர்க் கேமரா (VHS recorder) மூலம் வீடியோ ரெக்கார்ட் செய்யும் வசதி..
  • கணினித் திரையை ரெக்கார்ட் செய்யும் வசதி.. (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ)
  • மௌஸ் ஸ்கோரல் மூலம் Zoom செய்யும் வசதி..
  • Snotshot எடுக்கும் வசதி
  • டெக்ஸ்ட்டை வீடியோவில் சேர்க்கும் வசதி..
  • மௌஸ் ஹைலைட்டிங் ஸ்பாட்லைட் வசதி..
இதுபோன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த மென்பொருள் மூலம் எப்படி வெப்கேமிராவைப் பயன்படுத்தி வீடியோ ரெக்கார்டிங் செய்வது?
  • முதலில் மென்பொருளைத் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
  • பிறகு மென்பொருளை கணினியில் நிறுவி, திறந்துகொள்ளுங்கள்.
  • அதில் முதலில் Device என்ற ஒரு பட்டன் (வெப்கேமிரா படம்) இருக்கும்.
  • அதைக் கிளிக் செய்தால் வெப்கேமிரா திறந்து உங்களுடைய படம் கணினித் திரையிதோன்றும்.
அத்திரைக்கு கீழாக சிவப்பு நிற வட்ட வடிவ சிறிய பட்டன் இருக்கும் அதை அழுத்தினால் வீடியோ ரெக்கார்டிங் ஆக ஆரம்பிக்கும். மூன்றாவதாக இருக்கும் Stop பட்டனை அழுதினால் ரெக்கார்ட் ஆன வீடியோவானது சேமிக்கப்படும்.

சேமித்த வீடியோவை எப்படி பார்ப்பது?

மென்பொருளில் Recordings என்ற பட்டன் இருக்கும். அதைக் கிளிக் செய்தால் நீங்கள் ரெக்கார்ட் செய்த வீடியோ கோப்பு பட்டியலைக் காணலாம். தேவையெனில் அதை திறந்து பார்த்துக்கொள்ளலாம்.

சேமிக்கப்பட்ட வீடியோக்களை உங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் எடிட் செய்தும் சேமிக்க முடியும்.

இன்மென்பொருளில் உள்ள வசதிகளைப் பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி மற்றுமொரு பதிவில் பார்ப்போம். மிக்க நன்றி.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?