சிம்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ஆன்ட்ராய்ட் டேப்லட் பி.சி.!

கம்ப்யூட்டர் சாதனங்கள் தயாரிக்கும் ஒரு பிரபலமான நிறுவனம் சிம்ட்ரானிக் (Simmtronics). பலதரப்பட்ட சாதனங்களைத் தயாரித்து வழங்கும் இந்நிறுவனம் தன்னுடைய புதிய டேப்ளட் பிசியை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் XPAD வரிசையில் முதன்மை டேப்ளட்டாக இது அமைந்துள்ளது. XPAD 801, XPAD X1010, XPAD Mini மற்றும் XPAD 802 என்ற வரிசையில் இப்புதிய டேப்ளட் பிசி (XPAD Freedom Android Tablet PC) தற்பொழுது வெளிவந்துள்ளது. இத்தரமிக்க டேப்ளட் பிசி தற்பொழுது இந்திய சந்தையில் கிடைக்கிறது.

பல்வேறு சிறப்பு மிக்க வசதிகள் கொண்ட இந்த டேப்ளட் பிசியின் விலை ரூபாய் 13,999 ஆகும்.
  • XPAD-Freedom-Android-tablet-with-
  • 1.2GHz-quad-core-processor-
  • 7.8-inch-1024-768p-resolution-display-for-INR-13999
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzg8tMIUQ8AVcaaEmn7W0TS5It9mPIvigfXbRNsJYw1bKKDkmESJNbethDeMSxrCiIGobyCwg5Vzs8cshAjGuox-gNsjV9XWikSqxP9DQlDvKXftTwk7t1rNvQek_rGb1-pJKpWXtRsng/s1600/XPAD-Freedom-Android-tablet-with-1.2GHz-quad-core-processor-7.8-inch-1024-768p-resolution-display-for-INR-13999.jpg


XPAD Freedom Android tablet pc Specifications 
(எக்ஸ்பேட் ப்ரீடம் டேப்ளட் பி.சி. யின் சிறப்பம்சங்கள்)
  • 1024x768 பிக்சல் திறனுடன் கூடிய 7.8 அங்குல திரை (Display) கொண்டது.
  • இரண்டுசிம்கார்ட்டுகள் பயன்படுத்தும் வசதி உள்ளது. 
  • டேப்ளட் பிசியை நன்முறையில் இயக்கத் தேவையான 1.2GHz quad-core processor.
  • மற்றும் 1GB RAM பெற்றுள்ளது.
  • 8GB கொள்ளவு கொண்ட உள்ளக நினைவகம்.
  • வீடியோக்கள் மற்றும் படங்கள் எடுக்க 5 மெகா பிக்சல்திறன் கொண்ட பின்புற கேமரா.
  • வீடியோ அழைப்பு மற்றும் இணைவழி வீடியோ சாட்டிங்கிற்குப் பயன்படும் 2MP முன்புற கேமரா ஆகியவையும் இணைந்துள்ளன.
  • மேற்குறிப்பிட்ட அனைத்து பாகங்களும் சிறப்பாக இயங்கத் தேவையான மின்சக்தியை வழங்க 5000mAh battery யும் உண்டு.
  • இந்த டேப்ளட் பிசியின் இயங்குதளமாக கூகிளின் பிரபலமான android 4.2 jelly bean OS உள்ளது.
  • ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் இயங்குதளத்தில் இயங்குவதால் மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை இந்த டேப்ளட்டில் பெறலாம்.
இப்புதிய ஆண்ட்ராய்ட் டேப்ளட் பற்றி அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (MD) கூறிய கூற்று இது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?