ஆப்பிள், ஆண்ட்ராய்ட் போன்களில் ஆபிஸ் டாகுமெண்ட்கள் உருவாக்க..
இன்று நம்மில் பலர் கணினியில் எம்.எஸ். ஆபிஸ் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அலுவல் மற்றும் தனிப்பட்ட கோப்புகளை தயாரிக்கவும், தொழில் மற்றும் கல்வி சார்ந்த பிராஜக்ட்களுக்கு பவர்பாய்ண்ட் ஸ்லைட்ஷோ (PowerPoint slide show) உருவாக்கவும், கணக்குகள், மற்றும் டேட்டா (Data) விவரங்களை பதிய MS-excel sheet ம் பயன்படுகிறது.
கணினியில் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைப் பயன்பாடு எம்.எஸ். ஆபிஸ். MS office ஐப் பயன்படுத்தாத எந்த அலுவலகமும் இல்லை. அதே போல தனிப்பட்ட மனிதர்களும் எம்.எஸ். ஆபிஸ் தொகுப்பை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு கணினியின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்ட இந்த பயன்மிக்க பயன்பாட்டை தற்பொழுது அதிகரித்து வரும் ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல். கணினியின் பயன்பாட்டுக்குப் பிறகு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனம் என்றால் அது ஸ்மார்ட் போன்தான்.
பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாக்கஃகொண்டே இயங்குகின்றன. அதற்கு அடுத்துப் பார்த்தோமானால் ஆப்பிள் iOS இயங்க கூடிய ஆப்பிள் போன்கள்.
கணினிக்கு அடுத்து மேற்கூறிய கையடக்கத் தொலைபேசியே கணினியாய் மாறிவிட்ட காலமிது. கணினியில் செய்யத்தக்க அனைத்து வேலைகளையும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் செய்ய முடியும். அதாவது நீங்கள் வைத்திருக்கும் ஆண்ட்ராய்ட் போன் மற்றும் ஆப்பளின் ஐ.ஓ.எஸ் போன்களிலேயே இதுபோன்ற ஆபிஸ் டாக்குமெண்ட்களை (MS office, MS-Excel, MS-powerpoint) உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது கூகில்.

இதற்காக கூகில் 10 GB இலவச இணைய சேமிப்பு இடவசதியுடன் Quick Office என்ற மென்பொருளை (application) இலவசமாக தருகிறது.
இதன் மூலம் MS Excel, MS-PowerPoint, MS-Word ஆவணங்களை ஸ்மார்ட் போன்களிலேயே தயாரித்துக்கொள்ள முடியும்.
இந்த எளிமையான கட்டமைப்புக் கொண்ட மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Download quick office for Android Device
Download Quick office for iOS
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களுடைய ஸ்மார்ட் போன்களிலேயே ஆபிஸ் டாகுமெண்ட்களை தயாரித்துக்கொள்ள முடியும். பயன்மிக்க இம்மென்பொருளை தந்த Google மற்றும் Apple நிறுவனங்களுக்கு நன்றி.

Comments