Posts

Showing posts from October, 2013

Touch செய்ய முடியாத screen களை Touch Screen களாக மாற்ற E-touch Pen..!

Image
  பதிவின் தலைப்பைப் பார்த்தவுடனே உங்களுக்கு நான் எதோ உங்களை ஏமாத்துவது போல இருக்கும், ஆனால் நான் உண்மையைத் தான் கூறுகிறேன். Jeswill HiTech Solutions Pvt. Ltd. என்ற நிறுவனம் E-touch pen என்ற கருவியை உருவாக்கியுள்ளது.. Microsoft நிறுவனம் புதிதாக வெளியிட்டிருக்கும் Windows 8 ஐ பல பேர் பாவனை செய்கிறார்கள். ஆனால் அதன் உண்மையான அனுபவத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் தொடுதிரையான monitor அல்லது laptop வாங்குவது என்பது மினக்கெட்ட வேலை. காசு நிச்சயமாக இந்திய ரூபாய் 1௦௦௦௦ க்கு கிட்டத்தட்ட வரும். ஆனால் இந்தக் கருவி குறைந்த விலை அதாவது கிட்டத்தட்டஇந்திய ரூபாய் நான்காயிரம் அப்படித் தான் வரும். இந்தக் கருவி பற்றித்தான் நாம் சற்று இங்கு பாப்போம்... இது ஒரு பேனாவைப் போன்ற வடிவம் கொண்டது. இதில் ULTRA SOUND , infrared தொழிநுட்பம் பயன்படுத்தப்படுகின்றன. இது விண்டோஸ் 8 க்கு என வடிவமைக்கப்பட்டது. இந்தப் பேனாவை  விசேசமாக R efill , Battery என்பனவற்றுடன் வரும் நீங்க தொடுதிரையாக மாற்ற மூன்று சாதனங்கள் இதையும் சேர்த்து வரும்... Base Unit ஒன்று வரும்... USB Cable.. இந்த...

இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்றலமா..?

Image
சான்றிதழ்கள், புத்தகங்கள் நகலெடுத்து (Scan) தனித்தனி இமேஜ் பைலாக வைத்திருப்போம். மேலும் இதுபோன்று முக்கியமான பைல்களை பிரதியெடுத்து இமேஜ் பைலாக வைத்திருப்போம். அவை அனைத்தையும் ஒரே பைலாக ஒன்றினைக்க வேண்டுமெனில் நாம் அந்த இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்றினால் மட்டுமே முடியும். இமேஜ் பைல்களை பிடிஎப் பைலாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. அப்ளிகேஷனை தரவிறக்க சுட்டி   அப்ளிகேஷனை சுட்டியில் குறிபிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து படத்தினை தேர்வு செய்து பின் Convert Now என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்து கொள்ளவும். Setting பொத்தானை அழுத்தி Security Settings எனும் டேப்பினை பாஸ்வேர்டு உள்ளிட்டு இறுதியாக Convert Now பொத்தானை அழுத்தவும். தற்போது பாஸ்வேர்டு குறிப்பிட்ட பிடிஎப் பைலிற்கு பாஸ்வேர்டு உள்ளிடப்பட்டு இருக்கும். மேலும் குறிப்பிட்ட பிடிஎப் பைலிற்கு வாட்டர்மார்க் இட்டுக்கொள்ளவும் முடியும்.

பிடிஎப் (PDF) பைல்களை பிரிக்க, சேர்க்க மற்றும் பக்கங்களை மறுவரிசைப்படுத்தலமா..?

Image
பிடிஎப் பைலினை ஒருமுறை உருவாக்கி விட்டால் அதனை உடைக்கவோ, மறுவரிசைப்படுத்தவோ முடியாது மேலும் இவ்வாறு உருவாக்கும் பிடிஎப் பைல்களில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. என்றுதான் பலரும் நினைத்துகொண்டு இருப்பார்கள் ஆனால் பிடிஎப் பைலினை விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறக்கவும். Plugins வரிசையின் கீழ் உள்ள இணைப்பினை பயன்படுத்தி பிடிஎப் கோப்பினை தேவைகேற்ப தலைகீழாக மாற்றவும், பிரிக்கவும், இணைக்கவும் வேண்டியவாறு பக்கங்களை திருத்திக்கொள்ளவும். இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். பிடிஎப் கோப்புகளை திருத்தம் செய்வதற்கு அருமையான மென்பொருள் ஆகும்.

பிடிஎப் (PDF) பைல்களை எடிட் செய்யலமா..?

Image
பிடிஎப் கோப்புகளை உருவாக்குவதற்கு முக்கியமான காரணம் அதனை எந்தவிதமான எடிட்டிங்கும் செய்ய கூடாது என்பதற்காகவும், மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மட்டுமே ஆகும். நாம் ஆப்பிஸ் தொகுப்பினை கொண்டு டாக்குமெண்ட்களை உருவாக்கும் போது அதற்கு கடவுச்சொல் கொண்டு உருவாக்கியிருப்போம். ஆனால் பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் போது அதற்கு கடவுச்சொல் கொண்டு உருவாக்குவது அவ்வளவு எளிதான செயல் இல்லை. ஏதாவது ஒரு மென்பொருள் துணைகொண்டு மட்டுமே பிடிஎப் கோப்பிற்கு கடவுச்சொல்லை உருவாக்க முடியும். மேலும் பிடிஎப் கோப்பின் பக்கங்களை தனித்தனியாக பிரிக்கவும், பிடிஎப் டாக்குமெண்டிற்கு பேக்ரவுண்ட் வாட்டர்மார்க் செட் செய்யவும் நாம் மூன்றாம் தர மென்பொருளின் உதவியை நாட வேண்டும்.  மென்பொருளை தரவிறக்க சுட்டி   மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் விருப்பபடி தேர்வினை தெரிவு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட பிடிஎப் கோப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின் Save As பொத்தானை அழுத்தி பிடிஎப் கோப்பினை சேமித்துக்கொள்ளவும்....

ஹார்டு ட்ரைவ் ஐகான்களை மாற்றலமா...?

Image
ஹார்டு டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்போம், விண்டோஸ் இயங்குதளத்தில் C,D,E,F என வரிசையாக ட்ரைவ்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த ட்ரைவ் ஐகான்களை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். ட்ரைவ்களுக்கு எவ்வாறு பெயரினை மாற்றியமைத்து வைத்துக்கொள்கிறமோ அதே போல் ட்ரைவ் ஐகான்களையும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு இலவச மென்பொருள் ஒன்று வழிவகை செய்கிறது. மென்பொருளை தரவிறக்க சுட்டி மென்பொருளை சுட்டியில் குறிபிட்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். ஒப்பன் ஆகும் விண்டோவில் குறிப்பிட்ட ட்ரைவினை தேர்வு செய்து பின் Install என்னும் பொத்தானை அழுத்தவும். பின் குறிபிட்ட ஐகானை தேர்வு செய்யவும். ட்ரைவ் ஐகான் மாற்றப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி தோன்றும். இப்போது மைகம்ப்யூட்டரை திறந்து பார்த்தால் ட்ரைவ் ஐகான்கள் மாற்றப்பட்டு இருக்கும். சில நேரங்களில் நீங்கள் குறிப்பிட்டவாறு ஐகான்கள் மாற்றமடையவில்லையெனில் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து பின் திறக்கவும் அப்போது ட்ரைவ் ஐகான்கள் மாற்றப்பட்டு இருக்கும். இது ஒரு இலவச...

Facebook ல் Game request போன்ற சில தொல்லைகளிலிருந்து விடுபட..

Image
வணக்கம் நண்பர்களே..!! இந்தப் பதிவு பொதுவாகப் பலர் அறிந்திருந்தாலும்... உங்களுடன் பகிர நினைத்ததால் இதை எழுதுகிறேன்... Facebook என்பது சமூக வலைத்தளம்.. அந்த வகையில் பலர் Games Request , Event என்பவற்றை create செய்து request கொடுப்பது , சில வேளைகளில் மிரட்டல்கள் chat மூலம் அனுப்புவது போன்ற வேளைகளில் ஈடுபடுவார்கள். அதிலிருந்து நாம் சற்று ஒதுங்கி இருப்போம் என விரும்புவோருக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்குமெனக் கூறி பதிவை எழுதுகிறேன். முதலில் உங்கள் Facebook account க்குள் login செய்து கொள்ளுங்கள். பின் Settings என்ற option ல் Privacy Settings என்ற option ஐ click செய்யுங்கள்..   பின்னர் Blocking என்ற option ஐ click செய்யவும்.. click செய்த பின் இவ்வாறு தோன்றும்.... பின்னர் என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்கே தெரியும்... Block users என்பது உங்களுக்கு யாராவது தப்பான நபராகத் தெரிந்தால் அவர் பெயரைக் கொடுத்து Block என்பதை click செய்யுங்கள். இனி அவர் உங்களைத் நெருங்குவது கடினம். இப்படி Game அதாவது Apps களை block செய்வது போன்ற வசதிகளும் அந்தப் பக்கத்திலே உள்ளது. நீங்க...

சிம்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ஆன்ட்ராய்ட் டேப்லட் பி.சி.!

Image
கம்ப்யூட்டர் சாதனங்கள் தயாரிக்கும் ஒரு பிரபலமான நிறுவனம் சிம்ட்ரானிக் (Simmtronics). பலதரப்பட்ட சாதனங்களைத் தயாரித்து வழங்கும் இந்நிறுவனம் தன்னுடைய புதிய டேப்ளட் பிசியை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் XPAD வரிசையில் முதன்மை டேப்ளட்டாக இது அமைந்துள்ளது. XPAD 801, XPAD X1010, XPAD Mini மற்றும் XPAD 802 என்ற வரிசையில் இப்புதிய டேப்ளட் பிசி (XPAD Freedom Android Tablet PC) தற்பொழுது வெளிவந்துள்ளது. இத்தரமிக்க டேப்ளட் பிசி தற்பொழுது இந்திய சந்தையில் கிடைக்கிறது. பல்வேறு சிறப்பு மிக்க வசதிகள் கொண்ட இந்த டேப்ளட் பிசியின் விலை ரூபாய் 13,999 ஆகும். XPAD-Freedom-Android-tablet-with- 1.2GHz-quad-core-processor- 7.8-inch-1024-768p-resolution-display-for-INR-13999 XPAD Freedom Android tablet pc Specifications  (எக்ஸ்பேட் ப்ரீடம் டேப்ளட் பி.சி. யின் சிறப்பம்சங்கள்) 1024x768 பிக்சல் திறனுடன் கூடிய 7.8 அங்குல திரை (Display) கொண்டது. இரண்டுசிம்கார்ட்டுகள் பயன்படுத்தும் வசதி உள்ளது.  டேப்ளட் பிசியை நன்முறையில் இயக்கத் தேவையான 1.2GHz quad-core processor. மற்றும்...

விண்டோஸ் 8.1 புதுமைகள்

Image
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரும், இலவசமாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள விரும்புவார்கள். சில பொதுவான முன் எச்சரிக்கை தகவல்களை இங்கு காணலாம். 1. விண்டோஸ் 8.1 இன்ஸ்டலேஷனை வெற்றிகரமாக முடிக்க உங்களுக்கு விண்டோஸ் லைவ் (Windows Live) அக்கவுண்ட் ஒன்று தேவைப்படும். 2. தேடல் ஒருங்கிணைப்பு: விண்டோஸ் 8.1.ல் தேடுகையில், முடிவுகள், உங்கள் கம்ப்யூட்டர், உங்களுடைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இணையத்திலிருந்து தரப்படும். 3. பொதுவான, அடிப்படையான விண்டோஸ் 8 அப்ளிகேஷன்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு 8.1லும் தரப்பட்டுள்ளன. மெயில், போட்டோ, தொடர்புகள், காலண்டர் என இவை அடங்கும். 4. க்ளவ்ட் ஸ்டோரேஜ்: நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில், ஸ்கை ட்ரைவில் பதியப்பட்டு பாதுகாக்கப்படும். இதுவரை சி (C:) ட்ரைவ் மட்டுமே இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்தது. நீங்கள் விரும்பினால், வேறு ஒரு ட்ரைவிற்கு மாற்றிக் கொள்ளலாம். 5. விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், மேம்படுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 தரப்படுகிறது.   6. ஏற்கனவே நாம் அனைவரும் வ...

ஜுலை - செப்டம்பரில் மால்வேர் அட்டகாசம்

Image
சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில், மூன்றில் ஒரு பங்கினர், ஏதேனும் ஒரு மால்வேர் வைரஸ் புரோகிராமினால், பாதிக்கப்பட்டதாக, காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. காஸ்பெர்ஸ்கியின் சோதனைச்சாலையில், 2 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 308 மால்வேர் புரோகிராம்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 33.8 சதவீத இணைய பயனாளர்கள், இவற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் புரோகிராம்கள் அனைத்துமே, பயனாளர்களின் செயல்பாட்டினாலேயே, அவர்களின் கம்ப்யூட்டர்களில் பரவின. இவற்றைப் பரப்பிய டிஜிட்டல் குற்றவாளிகள், ஒரு நல்ல புரோகிராமினை டவுண்லோட் செய்திடுங்கள் என்று வாடிக்கையாளர்களை ஏமாற்றி, இவற்றை பரப்பியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தவகை புரோகிராம்கள், பெரும்பாலும் வங்கி சார்ந்த தகவல்களைத் திருடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன. இந்த புரோகிராம்கள் பரவியதால், உலக அளவில், இணையத்தைப் பயன்படுத்துவதால், அதிக அளவில் ஆபத்தினைச் சந்திக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 16 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், 52 சதவீதம் பேர...

2014ம் ஆண்டிற்கான Avast Antivirus இறுதி version வெளியிடப்பட்டுவிட்டது...!!

Image
   வணக்கம் நண்பர்களே..!! இன்று 2014ம் ஆண்டிற்கான Avast Antivirus இறுதி version வெளியிடப்பட்டுள்ளது. அதை தரவிறக்க சுட்டியுடன் இங்கே உங்களுக்காக தர இருக்கிறேன். அதற்கு முதல் இது பற்றிய சில கருத்துகளை ஆராய்வோம்.. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல Unknown files பற்றி ஆராய சிறந்த DeepScreen டெக்னாலஜி அதாவது Dynamic binary translation and dyna-gen என புதுப்போளிவுடைய மென்பொருள். update வசதி எனவும் மெருகேற்றப்பட்ட CLOUD SCANNING முறையும் இம் மென்பொருளில் காணப்படுகிறது. உங்கள் வீட்டிலிருக்கும் வயது முதிர்ந்தோர் எதாவது தவறாக செய்யும் போது அவற்றைத் தடுக்க Mode Stricter என்ற புதிய வசதி. இது தவறாக எதாவது இடம்பெற்றால் உடனே சத்தம் போடும். Malwareகளை அழிக்கும் தன்மை மெருகேற்றப்பட்டுள்ளது. Safe Zone என்ற option மூலம் Safe ஆக shopping செய்ய Banking வசதிகளை மேற்கொள்ள இந்த மென்பொருள் பாதுகாப்பு அழிக்கும். இந்த மென்பொருள் version மற்ற vesionகளை விட கையாள்வது சுலபமானதாகக் காணப்படுகிறது.    தரவிறக்க... avast! Free Antivirus 2014.9.0.2006 | 81.3 MB (Non commercial fre...

மெயில் சர்வர் வகைகள்

Image
உங்கள் மெயில் கணக்கினைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடுகையில், உங்களுக்கு எந்த வகையான அக்கவுண்ட் வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு, அவற்றின் வகைகளாக - POP, SMTP மற்றும் IMAP என்பவை காட்டப்படும். இவை எவற்றைக் குறிக்கின்றன? இடையே உள்ள வேறுபாடு என்ன எனப் பார்க்கலாம். 1.  பாப் .3 (POP3 ): இதனை Post Office Protocol 3 என விரிக்கலாம். இந்த வகையில் செயல்படும் சர்வரில், உங்களுக்கென வரும் மின் அஞ்சல் செய்திகள் பாதுகாத்து வைக்கப்படும். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில், ஏதேனும் ஒரு (Windows Mail, Outlook அல்லது Thunderbird) இமெயில் கிளையண்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி, இவற்றை உங்கள் கம்ப்யூட்டருக்குள் பதிக்கலாம். பொதுவாக, அவ்வாறு பதித்தவுடன், அந்த மெயில் செய்திகள் சர்வரிலிருந்து அழிக்கப்படும். அப்போதுதான் அடுத்து வரும் செய்திகளுக்கு இடம் கிடைக்கும். நீங்கள், எந்தக் கம்ப்யூட்டரில் இந்த மெயில் செய்திகளைப் பதிந்தீர்களோ, அவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, திறந்து பார்த்து படித்து பதில் அனுப்பலாம். அல்லது நீக்கலாம். 2. ஐமேப் (IMAP): Internet Message Access Protoc...

சாதனை படைத்த சிவில் இன்ஜீனியர்கள் 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிகட்டிடம்

Image
பஞ்சாபின் புறநகர் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணிநேரத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று ரூ.1,000 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தொழில் அதிபர்ஹர்பல் சிங் முடிவு செய்தார். இதையடுத்து அந்தக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்தவியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடந்தது. பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமானப் பணியாளர்கள் மளமளவென வேலையைத் துவங்கி குறிப்பிட்ட 48 மணிநேரத்திற்குள் 10 மாடிக் கட்டிடத்தை கட்டி முடித்தனர். முதல் 3 மாடிகள் வெறும் 6 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த கட்டிடத்தை கட்ட ஏற்கனவே பின்னப்பட்ட செண்டிரிங் மற்றும் தூண்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 200 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 பணியாளர்கள், டெக்னீஷியன்கள், என்ஜினியர்கள் சேர்ந்து இந்த சாதனையை செய்துள்ளனர். இந்த கட்டிடத்திற்கு தேவையான பொருட்கள் அருகில் உள்ள கம்பெனியில் கடந்த 2 மாதங்களாக தயாரிக்கப்பட்ட...

வெப்-கேம் மூலம் வீடியோ ரெக்கார்டிங் செய்யலாமா?

Image
பெரும்பாலானவர்களுக்கு தங்களுடைய கணினியில் உள்ள வெப்கேம் மூலம் ரெக்கார்ட் செய்வது எப்படி என்பதை தெரிவதில்லை. வீடியோ ரெக்கார்டிங் என்ற ஆப்சனை அதில் உள்ளதா என்பதே ஒரு சிலருக்கு சந்தேகமாக உள்ளது. சிலருக்கு வெப்கேம் மூலம் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும் என்பது தெரிந்திருந்தும் அதைப் பயன்படுத்தாமலேயே இருந்திருப்பார்கள். திடீரென ஒரு வீடியோ ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்ற சூழல் ஏற்படும்பொழுது அந்த வசதியைப் பயன்படுத்துவதில் சந்தேகம் சிக்கல்கள் எழும். இது இயல்பானதுதான். மிக எளிதாக வெப் கேம் மூலம் வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம். வீடியோ ரெக்கார்ட் செய்வதற்கு சில வழிகள் உள்ளது. அவற்றில் இரண்டு வழிமுறைகளை இப்பதிவின் ஊடாக கற்றுக்கொள்வோம். எப்படி வெப்கேம் மூலம் வீடியோ ரெக்கார்ட் செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம். வெப்கேம் மூலம் வீடியோ ரெக்கார்ட் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியது ஒரு வெப் கேமரா .. ஒரு கணினி.. 1. விண்டோஸ் மூவி மேக்கர் மூலம்.. விண்டோஸ் மூவி மேக்கர் என்பது விண்டோஸ் கணனியுடன் இணைத்துக் கொடுக்கப்படும் புரோகிராம் ஆகும். இதன் மூலம் உங்களுக்கு வேண்டிய படங்களை வைத்து ஒரு ...

நானோ தொழில்நுட்பம் (Nano Technology) என்பது என்ன?

Image
இரும்பை பொன்னாக்கும் இரசவாத வித்தை என நாம் படித்திருப்போம். இந்த தனிமமாற்றம் (transmutation) வித்தையாக ஒரு சிலரால் பார்க்கப்பட்டாலும், பழைய கிரேக்கர், எகிப்தியர்கள், தமிழர்கள் இந்த முறையில் இருந்து மாறி, குறிப்பிட்ட உலோகங்கள் மேல் வேறொரு உலோகத்தைப் பூசுவதன் மூலம், செயற்கை முறையை அறிமுகப்படுத்தினார்கள். இந்த முறை அறிவியல் துறை உட்பட பலவற்றுக்கு பயன்படுகின்றன. ராக்கெட்டுக்கள் (thermal protection system (TPS) உட்பட பலவற்றை, உயர் வெப்ப நிலையில் இருந்து பாதுகாக்க, பல பொருட்கள் கலந்த பூச்சு முறை பயன்படுகிறது. விலை உயர்ந்த தங்க நகைகளை (covering) வாங்க முடியாத ஏழைகள் கூட இந்த பூச்சு முறையால் பயன்பெறுகிறார்கள். மேலே சொன்ன தனிமமாற்றம் முன்னர், சோதிடத்துடன் இணைந்து alchemy -இரசவாதம்- pseudoscience – என்று பெயரிலும் சிலர் பார்த்தார்கள். ஏனெனில் அன்று வாழ்ந்த மக்கள், இன்றும் கூட, உலகில் உள்ள மக்கள், கிரகங்களாலும், நட்சத்திரங்களாலும் கட்டுப்படுத்தப் படுகிறார்கள் என நம்பினார்கள், நம்புகிறார்கள். ஆனாலும் அறிவியல் முறையில் பார்த்தால், சில உலோகங்கள் இன்னொரு உலோகத்துடன் சேர்ந்து வேறொரு உலோகத்தை உருவா...

இலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line Application

Image
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம். Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line Application உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த Application ஐ பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி ரெகார்ட் செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும். இது எல்லா Smartphone க்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும். உங்கள் போனில் இதை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொண்டால் உங்கள் கணினியில...

Clean Boot என்றால் என்ன?

Image
கணினியில் தவறுகள் (errors) ஏற்படும் போது சில மென்பொருட்களையும், சில Device Driver களையும் நிறுத்தி வைத்து கணினியை Restart செய்து தவறுகளைக் கண்டறியவும், சரி செய்யவும் சிறந்த முறை safe boot ஆகும். இது தவிர safe mode இல் இருந்து சிறிது வேறுபட்டு clean boot தொடக்கப்படுகிறது. அதாவது boot செய்யப்படும் போது Microsoft services ஐ மட்டும் வைத்து கணினி தொடங்கப்படும்.Clean Boot, XP கணினிகளில் சிறிது சிரமமாகும். Start -> Run சென்று msconfig.exe என Type செய்யவும். வரும் கட்டத்தில் “General – Selective startup” என்பதை தெரிவு செய்யவும்.அதில் வரும் Load startup items என்பதை uncheck செய்யவும். (இப்போது அங்கே Load System Services என்பது மட்டும் ஆக்டிவ் ஆகி இருக்கும்) அதன்பின் services என்பதில் சென்று Hide all Microsoft services என்பதை check செய்து, வலது பக்கத்தில் உள்ள Disable all என்பதைக் கிளிக் செய்து OK கொடுக்கவும். இதை முடித்தவுடன் கணினியை Restart செய்யவும். இப்படி செய்வதால் இணையம் உட்பட பல வேலை செய்யாது. பிரச்சனைகளை பொறுத்து சில மணி நேரம் தொடர்ந்து கணினியை அப்படியே வைத்திருந்து சில ப்ரொகிராம்கள...

ஷிப்ட் கீயும் மவுஸ் கிளிக்கும்

Image
  அநேகமாக அனைத்து கம்ப்யூட்டர்களுமே, மவுஸ் தரக்கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. நாம், இந்த வசதிகளை முழுமையாக அறியாமல், சில செயல்பாடுகளுக்கே பயன்படுத்துகிறோம். இங்கு மவுஸ் பயன்படுத்தி, நாம் ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து செயல்பாடுகளையும் பார்க்கலாம். இதன் மூலம் நாம் நம்முடைய வேலைப் பயன்களைப் பல மடங்காக்கலாம். ஷிப்ட் கீ + மவுஸ் கிளிக்: அனைத்து டெக்ஸ்ட் எடிட்டர்கள் மற்றும் புரோகிராம்கள், அனைத்து டெக்ஸ்ட் அல்லது குறிப்பிட்ட டெக்ஸ்ட் பகுதியினை ஷிப்ட் கீ மற்றும் மவுஸ் இணைத்துப் பயன்படுத்தி ஹைலைட் செய்வதனை அனுமதிக்கின்றன. எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் ஒன்றின் பாரா தொடக்கத்தில், கர்சரைக் கொண்டு சென்று, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, பாராவின் இறுதி நிலையில், கிளிக் செய்தால், பாரா முழுவதும் ஹை லைட் செய்யப்படும். இதில் இன்னொரு வழியும் உள்ளது. டெக்ஸ்ட் எடிட்டர் ஒன்றில், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால், டெக்ஸ்ட்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் டெக்ஸ்ட்டின் பாரா, நெட்டு பத்தியாக இருந்தால்...

100 இற்கும் மேற்பட்ட அறியவேண்டிய பயனுள்ள Run commands பட்டியல்

Image
பொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு… Accessibility Options : access.cpl Add Hardware : hdwwiz.cpl Add / Remove Programs : appwiz.cpl Administrative Tools : control admintools Automatic Updates : wuaucpl.cpl Wizard file transfer Bluethooth : fsquirt Calculator : calc Certificate Manager : certmgr.msc Character : charmap Checking disk : chkdsk Manager of the album (clipboard) : clipbrd Command Prompt : cmd Service components (DCOM) : dcomcnfg Computer Management : compmgmt.msc DDE active sharing : ddeshare Device Manager : devmgmt.msc DirectX Control Panel (if installed) : directx.cpl DirectX Diagnostic Utility : dxdiag Disk Cleanup : cleanmgr System Information : dxdiag Disk Defragmenter : dfrg.msc Disk Management : diskmgmt.msc Partition manager : diskpart Display Properties : control desktop Properties of the display (2) : desk.cpl Properties display (tab “appearanc...

நெட்வொர்க் மற்றும் ஐ.பி.முகவரி அறிய

Image
இணையத்தைப் பயன்படுத்தும் போது, நம் இணைப்பிற்கென ஓர் ஐ.பி. முகவரி தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய அனைவருக்கும் ஆவலாய் இருக்கும். ஒவ்வொரு நேரமும் ஒரு முகவரி தரப்படுவதால், சில செயல்பாடுகளுக்காக, அந்த நேரத்தில் தரப்படும் ஐ.பி. முகவரி அறியவும் ஆசைப்படுவோம். அதனை எப்படி அறியலாம் என்பதனை இங்கு பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி அறிவது என்பதனை முதலில் காண்போம். முதல் வழி, விண்டோஸ் இயக்க முறையில் கிளிக் செய்து பெறுவது. 1. முதலில் "Network Sharing Center' என்பதனைத் திறந்து கொள்ளவும். உங்களுடைய டாஸ்க் பாரில் உள்ள சிஸ்டம் ட்ரேயில், நெட்வொர்க்கிங் ஐகான் இருந்தால், அதனை கிளிக் செய்து, "Open Network and Sharing Center' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.    அல்லது, ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கிடைக்கும் தேடல் கட்டத்தில், network and sharing center என டைப் செய்திடவும். இதற்கான லிங்க் கிடைத்தவுடன், அதில் கிளிக் செய்திடவும். 2. இப்போது "Network and Sharing Center' கிடைக்கும். இங்கு "...

ஆப்பிள், ஆண்ட்ராய்ட் போன்களில் ஆபிஸ் டாகுமெண்ட்கள் உருவாக்க..

Image
இன்று நம்மில் பலர் கணினியில் எம்.எஸ். ஆபிஸ் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அலுவல் மற்றும் தனிப்பட்ட கோப்புகளை தயாரிக்கவும், தொழில் மற்றும் கல்வி சார்ந்த பிராஜக்ட்களுக்கு பவர்பாய்ண்ட் ஸ்லைட்ஷோ (PowerPoint slide show) உருவாக்கவும், கணக்குகள், மற்றும் டேட்டா (Data) விவரங்களை பதிய MS-excel sheet ம் பயன்படுகிறது. கணினியில் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைப் பயன்பாடு எம்.எஸ். ஆபிஸ். MS office ஐப் பயன்படுத்தாத எந்த அலுவலகமும் இல்லை. அதே போல தனிப்பட்ட மனிதர்களும் எம்.எஸ். ஆபிஸ் தொகுப்பை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். இவ்வாறு கணினியின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்ட இந்த பயன்மிக்க பயன்பாட்டை தற்பொழுது அதிகரித்து வரும் ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல். கணினியின் பயன்பாட்டுக்குப் பிறகு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனம் என்றால் அது ஸ்மார்ட் போன்தான். பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாக்கஃகொண்டே இயங்குகின்றன. அதற்கு அடுத்துப் பார்த்தோமானால் ஆப்பிள் iOS இயங்க கூடிய ஆப்பிள் போன்கள். கணினிக்கு அடுத்து மே...

ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!

Image
தகவல் தொழில்நுட்பம் அதிக வளர்ச்சிப்பெற்றபோதும் அதனுடைய பாதுகாப்பும் சில நேரங்களில் கேள்விக்குறியாகவே அமைந்துவிடுகிறது. பொதுவாக எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதற்கு எதிர்மறைப் பலன்கள் உண்டு என்பதை மறுப்பதற்கு இயலாது. பல்வேறு நிலைகளில் அதனுடைய பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. விலையுயர்ந்த கம்ப்யூட்டராக இருப்பினும் அதற்கு ஒரு ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் (Anti virus software)கட்டாயம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் என்ன விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் அதிலுள்ள கோப்புகளை நச்சு நிரல்கள் துவம்சம் செய்துவிடுகின்றன. அதேபோன்றதொரு நிலைதான் தற்பொழுது பிரபலமாகிக்கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நீடிக்கிறது என்பது கசப்பான உண்மை. விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட் மொபைல்களாக இருப்பினும் சரி.. விலையுயர்ந்த டேப்ளட் பி.சி. க்களாக இருப்பினும் சரி (Tablet pc, android tablet), எதுவாக இருப்பினும் வைரஸ் பாதிப்பு என்பது பொதுவானதே.  ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்துவோர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வைரஸ...

ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 4...

Image
(புதியவர்களுக்கு)   விரைவாக பிரௌசிங் செய்ய என்ற பகுதியில் இதுவரைக்கும் மூன்று பகுதிகளைப் பார்த்திருக்கிறோம்.  ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 1... ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 2...  ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 3...  இந்த பகுதியில் மேலும் சில குறுக்கு விசைகளைப் பார்ப்போம். தொடர்ந்து உள்ள டேப்களைக் காண கண்ட்ரோட்+டேப் கீகளை பயன்படுத்துக என கூறியிருந்தேன்.  அதைப்போலவே வரிசையாக டேப்களை கண்ட்ரோல்+1, கண்ட்ரோல்+2 என வரிசையாக்கஃ கொடுத்தும் டேப்களை காணலாம்.  அடுத்தடுத்துள்ள இரண்டு டேப்களுக்கு மட்டும் மாறிக்கொள்வது எப்படி? அடுத்துள்ள டேபிற்கு செல்ல Ctrl+Tab அடியுங்கள்.  மீண்டும் அதே டேபிற்கு வர Ctrl+Shift+Tab தட்டுங்கள். இப்பொழுது மீண்டும் பின்னோக்கி வருவீர்கள்.  இந்த இரண்டு செயல்களையும் செய்தால் தொடர்ந்து முன், பின் டேப்களுக்கு வர முடியும். இரண்டு தளங்களில்  மட்டும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற இந்த வழிமுறையைப் பின்பற்றலாம்.  இந்த வழிமுறையும் பின்பற்றும்போது சிறிது கடினமாக இருக்கலாம். ஆனால் ...

இணையத்தில் இலவசமாக உங்கள் வர்த்தகம்

Image
கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்திய வர்த்தகர்களை, தங்கள் செயல்பாட்டினை இணையம் வழியே மேற்கொள்ளுமாறு அழைத்துள்ளது. இந்த வகையில், 2014 ஆம் ஆண்டுக்குள், குஜராத் மாநிலத்தில், 50,000 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கொண்டு வர, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கென,இலவச இணைய தளங்களை வழங்குகிறது. வணிகத் தளங்களை, இணையத்தில் அமைத்திடும் செயல்பாட்டில், தொழில் நுட்ப ரீதியாக உதவி செய்திட, குஜராத்தில் 200க்கு மேற்பட்ட கூகுள் பொறியாளர்கள் செயல்படுவார்கள். இந்த நிறுவனங்கள், கூகுள் மேப்பிலும் மக்கள் அறியும் வகையில் இடம் பெறும். இவை அனைத்தும் முதல் ஆண்டுக்கு முற்றிலும் இலவசமே. பின்னர், இந்த நிறுவனங்கள், தாங்கள் விரும்பினால், கூகுள் நிறுவனத்திடமே தொடர்ந்து இந்த சேவையைப் பெறலாம். இதற்கு மாதம் ரூ.1,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். அல்லது வேறு நிறுவனங்களின் சர்வர்களில், தங்கள் வர்த்தக நிறுவன இணைய தளத்தை அமைக்கலாம். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், இணையம் வழி வர்த்தகத்தை மேற்கொள்வதில், மிகச் சில நிறுவனங்களே, ஆர்வம...