சாம்சங் கேலக்சி நோட் 3 - "Flexible Display" ஸ்மார்ட்போன்..!
பிளக்சிபிள் டிஸ்பிளேயுடன் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் Samsung Galaxy Note 3 வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் புதுடில்லியில் நடந்த சாம்சங் தயாரிப்பு வெளியீட்டு விழாவில் கேலக்சி 3 மற்றும் சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்சை வெளியிட்டது. விழாவில் கேலக்சி நோட் 3 பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதத்ததிற்கான 3, 2, EDGE போன்ற நெட்வொர்கில் பயன்படுத்தும் வகையில் இன்டர்நெட் இலவசமாக வழங்கப்படும் என சாம்சங் விழாவில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பான சாம்சங் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது. புதிய சாம்சங் கேலக்சிநோட் ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பம்சம்: சாம்சங் கேலக்சி 3 நோட் சாதனத்தை தமிழ் மொழியிலும் இயக்கலாம். தமிழ்மொழியில் இயங்குவதால் இணையத்தில் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே உள்ளீடு செய்து தேடலாம். தமிழைப் பயன்படுத்தியே அனைத்து செயல்பாடுகளையும் Samsung galaxy note 3 ல் செய்ய முடியும். பிளக்சிபல் டிஸ்பிளே (Flexible) வசதியைக் கொண்டது. ரப்பர் போல வளைந்து நெளிந்துகொடுக்கும் தன்மை. இதனால் இறுக்கமான ப...