மின்னல் வேகத்தில் இயங்கும் புதிய டேப்லெட்!

இப்போது சந்தையில் கிடைக்கும் பல டேப்லெட்டுகள் ஆன்ட்ராய்டு அல்லது விண்டோஸ் இயங்கு தளங்களில் இயங்குகின்றன. சமீபத்தில் லினக்ஸ் பர்ம்வேர் தொழில் நுட்பத்தில் இயங்கும் புதிய டேப்லெட்டைப் பற்றிய செய்திகள் வந்திருக்கின்றன. இந்த டேப்லெட்டின் பெயர் ஸ்பார்க் ஆகும். மேலும் இந்த டேப்லெட்டின் முக்கிய அம்சங்களை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த ஸ்பார்க் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களாகப் பார்த்தால் இது லினக்ஸ் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 7 இன்ச் அளவு கொண்டு 800 x 480 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது.
இந்த ஸ்பார்க் டேப்லெட் 1.3 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமரா மூலம் வீடியோ குழு உரையாடலை அருமையாக நடத்த முடியும். மேலும் இது 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட ஏஎம்லாஜிக் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இதில் மாலி 400 க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட்டும் உண்டு.
இதன் மெமரியைப் பார்த்தால் அது 4 ஜிபி ஆகும். மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் மெமரியை விரிவுபடுத்த முடியும். இதன் ரேம் 512 எம்பி ஆகும்.
இந்த டேப்லெட் பார்ப்பதற்கு படு ஸ்டைலாக உள்ளது. இதன் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல் வளைந்து சூப்பராக உள்ளது. இதை சட்டை பையில் மிக அழகாக வைத்துக் கொள்ளலாம்.
இந்த ஸ்பார்க் டேப்லெட்டில் இணைப்பு வசதிகளுக்காக வைபை, ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி போன்ற வசதிகளும் உள்ளன. இந்த ஸ்பார்க் டேப்லெட்டின் விலை ரூ.13,000 ஆகும். அடுத்த வாரத்திலிருந்து இந்த டேப்லெட் தேவைப்படுவோர் முன்பதிவு செய்யலாம். வரும் மே மாதம் இந்த டேப்லெட் கைகளுக்கு வந்துவிடும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க