சீன ஹேக்கர்களால் மைக்ரோசாப்ட் ஸ்டோர் வெப்சைட் முடக்கபட்டது!

 

மைக்ரோசாப்ட்வேர் நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் வாங்குவதற்கான இணையதளத்தை சீன ஹேக்கிங் கும்பல் முடக்கியுள்ளது.


இதனால் www.microsoftstore.co.in என்ற அந்த இணையதளம் ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியுள்ளது.


இணையதளத்தின் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை சீனாவைச் சேர்ந்த எவில் சேடோ டீம் என்ற கும்பல் திருடியிருப்பதாக தெரிகிறது.


ஐடிகளையும் பாஸ்வேர்டுகளையும் திருடியதுடன் இணையதளம் பாதுகாப்பற்றதாக உள்ளது என்ற வாசகத்தையும் பதிவு செய்துள்ளனர்.


இந்த தகவல் www.wpsauce.com இணையதளத்தில்தான் பிரேக்கிங் நியூஸ் என்ற தலைப்பில் முதலில் வெளியிடப்பட்டது.


தற்போதும் மைக்ரோசாப்ட் ஸ்டோர் இணையதளத்தில் "The Microsoft Store India is currently unavailable. Microsoft is working to restore access as quickly as possible. We apologize for any inconvenience this may have caused" என்ற தகவலே இடம்பெற்றுள்ளது.


இதனால் மைக்ரோசாப்ட் ஸ்டோர் இணையதளத்தை பயன்படுத்துவோர் ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதேபோல் சோனி நிறுவனத்தின் இணையதளமும் இணைய ஹேக்கர்ஸால் முடக்கப்பட்டிருந்தது.


இத்தகைய தொடர் சம்பவங்க்ளால் இணையதளத்தை பயன்படுத்துவோர் தங்களது ஐடிகளையும் பாஸ்வேர்டுகளையும் நிரந்தரமானதாக வைத்திருக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம்!

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS