கிராஃபிக்ஸ் வசதியுடன் ஃபயர்ஃபாக்ஸ் 10 வெர்ஷன்
தகவல்களை தேட உதவும் பிரவுசிங் வசதியிலும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இது போன்ற சிறந்த பிரவுசிங் வசதியினை ஃபயர்ஃபாக்ஸ் மூலம் பெறலாம்.
இதில் நிறைய புது வெர்ஷன் வந்து கொண்டே இருக்கின்றது. இப்பொழுது ஃபயர்ஃபாக்ஸில் புதிய 10 வெர்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் வெர்ஷனில் 3டி கிராஃபிக்ஸ் வசதி உள்ளது. இதற்கு முன்பு இருந்த 9 வெர்ஷன் அதிக டூல்பார் வசதிக்கு சப்போர்ட் செய்தது.
இதில்
கூடுதல் ஜாவா ஸ்கிரிப்டு தொழில் நுட்பத்தினை பெற முடிந்தது. புதிய
ஃபையர்ஃபாக்ஸ் 10 வெர்ஷனில், 9 வெர்ஷனை விட அதிக வசதியை பெறலாம்.
இந்த லேட்டஸ்டு வெர்ஷன் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புதிய ஃபயர்ஃபாக்ஸில் 3டி கிராஃபிக்ஸ் வசதி உள்ளது.
ஃபயர்ஃபாக்ஸ் 10 வெர்ஷன் ஃபுல் ஸ்கிரீன் அப்ளிக்கேஷனுக்கு சப்போர்ட் செய்யும்.
இதில்
உள்ள வசதிகளை சொல்லி கொண்டே போகலாம். இந்த புதிய வெர்ஷனை விண்டோஸ், மேக்
மற்றும் லினக்ஸ் எடிஷனில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.
Comments