Airtel Prepaid வாடிக்கையாளர்களுக்கும் இனி ஆன்லைன் வசதிகள் - புதிய சலுகை
இன்றைய காலக்கட்டத்தில் செல்போன்கள் என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது.
பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் கூட செல்போன்கள் பயன்படுத்தும் அளவுக்கும்
செல்போன்கள் வளர்ச்சி பெற்று விட்டது. செல்போன் சேவையில் அதிக
வாடிக்கையாளர்களைகொண்டு இந்தியாவில் முதல் இடத்தையும் உலகளவில் 5
இடத்திலும் இருக்கும் நிறுவனம் Airtel நிறுவனமாகும். இந்த Airtel நிறுவனம்
இப்பொழுது ஒரு புதிய சலுகையை அறிவித்து உள்ளனர். அதன் படி இனி Pre-Paid
வாடிக்கையாளர்களும் ஆன்லைனில் அக்கௌன்ட் ஓபன் செய்து கொண்டு ஆன்லைன்
வசதிகளை உபயோகிக்கலாம்.
முன்பு Postpaid வாடிக்கையாளர்கள் மட்டும் தான் இந்த வசதிகளை பயன்படுத்த
முடியும் இனி Prepaid வாடிக்கையாளர்களுக்கும்.
ஆன்லைனில் உள்ள வசதிகள்:
- உங்கள் மொபைலின் Balance மற்றும் Validity இணையத்தில் பார்த்து கொள்ளலாம்.
- கண்ட சலுகைகளை ஆக்டிவேட் செய்து விட்டு பணத்தை கொள்ளை அடிக்கும் சலுகைகளை நிறுத்தி விடலாம்.
- உங்கள் மொபைலுக்கு என்னென்ன சலுகைகள் உள்ளன என்பதை பார்த்து கொள்ளலாம்.
- எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகைக்கு ரீசார்ஜ் செய்தீர்கள் என்ற கடைசி ஐந்து Recharge History பார்த்து கொள்ளலாம்.
- உங்கள் மொபைலுக்கு ஆன்லைனில் recharge செய்து கொள்ளலாம்.
- என்னென்ன VAS (Value added Service) சலுகை உள்ளது என பார்த்து கொள்ளலாம்.
- இணையத்தின் மூலமே உங்கள் எண்ணை 3G க்கு மாற்றி கொள்ளலாம்.
ஆன்லைன் அக்கௌன்ட் ஓபன் செய்வது எப்படி:
- முதலில் இந்த www.airtel.in தளத்திற்கு சென்று அங்கு உள்ள My Account பகுதியில் உள்ள Choose Products என்பதை கிளிக் செய்து வரும் விண்டோவில் Prepaid என்பதை தேர்வு செய்யவும்.
- அடுத்து Login பக்கம் ஓபன் ஆகும் அதில் உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணையும், அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் verification குறியீடும் சரியாக கொடுத்து Submit பட்டனை அழுத்தவும்.
- நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்ட் அனுப்புவார்கள் அந்த பாஸ்வேர்டை குறித்து இங்கு வரும் விண்டோவில் கொடுத்து மறுபடியும் Submit பட்டனை அழுத்தவும்.
- அவ்வளவு தான் இனி நீங்களும் அங்கு உள்ள ஆன்லைன் வசதிகளை பெற்று உபயோகித்து கொள்ளலாம்.
Note: உங்கள் மொபைலுக்கு
அனுப்பப்படும் கடவுச்சொல்லின் மூலம் ஒரு முறை மட்டுமே நுழைய முடியும்.
மறுபடியும் நுழைய வேண்டுமானால் இதே வழிமுறையை பின்பற்றவும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Comments