பேஸ்புக் உபயோகத்தில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து சாதனை


சமூக தளங்களில் முதல் நிலையில் இருக்கும் இணையதளம் பேஸ்புக். தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது பேஸ்புக். இந்தியர்களிடையே பேஸ்புக் தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் பேஸ்புக் உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா.


 
Forbes தளத்தின் தகவல் படி 6வது இடத்தில் இருந்து ஒரே வருடத்தில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.
பிப்ரவரி 2012 கணக்கெடுப்பின் படி இந்தோனேசிய பயனர்களின் எண்ணிக்கை 43,060,360 இந்தியா பயனர்களின் எண்ணிக்கை 43,497,980 பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தான் UKவிடம் இருந்து இரண்டாவது இடத்தை தட்டி பறித்தது இந்தோனேசியா. ஆனால் மூன்றே மாதத்தில் இழந்தது.
தற்போதைய நிலவரப்படி பேஸ்புக் உபயோகத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும் வெற்றி நடை போடுகின்றன.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க