வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!


இணையம் மூலம் உருவாகும் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க தடா, பொடாவைவிட கம்ப்யூட்டர் வைரஸை களம் இறக்கியிருக்கின்றனர் சிரிய நாட்டு அதிபரின் ஆதரவாளர்கள்.


சிரியாவில் அரசுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் நூற்றுக்கணக்கான அரசு எதிர்ப்பாளர்களின் கணிணிகள் பழுதடைந்திருக்கின்றன.


அதிபர் பசாரின் ஆதரவாளர்கள் இத்தகைய வைரஸ் மூலம் எதிர்ப்பாளர்களின் இணைய ஐடிகளை களவாடுகின்றனர். இந்த ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை உபயோகித்து சாட்டிங் செய்கின்றனர்.


ரொம்ப நல்ல பசங்களாக சாட்டிங் செய்து வைரஸ்களை அவர்களுக்கு அனுப்பிவிடுகின்றனர்.


ஸ்கைபி மூலமாக சாட்டிங் செய்தபோது வந்திறங்கிய இத்தகைய வரைஸால் தமது கணணி பாதிப்புக்குள்ளானது என்கிறார் எதிர்ப்பு அணியைச் சேர்ந்த சாப்டேவ் என்ஜினியர் ஒட்மான்.


இத்தகைய வைரஸ்கள் டிசம்பர் 6 மற்றும் ஜனவரி 16-ந் தேதி இறக்கிவிடப்பட்டது என்கிறார் நார்ட்டன் ஆண்டி வரைஸ் நிறுவனத்தின் விக்ரம் தாகூர்.


அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனப் பெண்மணி இத்தகைய வைரஸை சந்திக்க நேர்ந்ததை விவரித்து கூறியதாவது:


மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக சிரியாவுக்கு ஜனவரி மாதம் சென்றிருந்தேன். அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை ஸ்கைபி வழியாக சாட்டிங் செய்ய அழைத்தேன். என்னுடன் பேசியது அரசுக்கு ஆதரவானவர் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.


சில நாட்களுக்குப் அரசுக்கு எதிரானவர்கள் நான் சாட்டிங் செய்த நபர் தடுப்புக் காவலில் இருப்பதாகக் கூற எனக்கு அதிர்ச்சி என்றார்.


இப்பொழுதும் சிரிய அரசு மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் உள்ளன.


சாப்ட்வேர் என்ஜினியர் ஒட்மானுக்கு இன்னொரு அனுபவம்....


பேஸ்புக் லோகோவை அனுப்பி திறந்து பாருங்க.. ஒன்றுமில்லை என்ற மெசேஜ் வேற இணைத்திருக்கின்றனர்.


சந்தேகப்பட்ட ஒட்மான், இந்த வைரஸை கலிபோர்னியாவுக்க்கு பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார். அப்போது அது வைரஸ் என உறுதி செய்யப்பட்டது.


brute என்று பெயரிடப்பட்ட வைரஸுக்கு அர்த்தம் வேற வைச்சிருக்காங்களாம்.. அரசு அடக்குமுறையை வெளிப்படுத்தத்தான் இத்தகைய வைரஸாம்


இண்டர்நெட்டை வைத்து கலகம் மட்டும் விளைவிக்க முடியுமா? அதே கலகத்தை அதே சாதனம் மூலம் அடக்கவும் முடியும் என்கிறார்கள்..

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க