ஹுவெய் வழங்கும் புதிய 10 இன்ச் டேப்லெட்!
பிப்ரவரி 27 முதல் மார்ச் 1ந் தேதி வரை பார்சிலோனாவில் உலக மொபைல்
கண்காட்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வில் பல மொபைல் தயாரிப்பாளர்கள்
தங்களது புதிய படைப்புகளை அறிமுகப்படுத்த இருக்கின்றனர். ஆனால் அவற்றைப்
பற்றியத் தகவல்கள் இப்போது முதலே கசிய தொடங்கிவிட்டன.
சமீபத்தில் வந்திருக்கும் தகவல்
என்னவென்றால் ஹுவெய் நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை இந்த கண்காட்சியில்
அறிமுகப்படுத்த இருக்கிறது என்பதாகும்.
இந்த ஹுவெய் டேப்லெட் 10 இன்ச் திரையைக்
கொண்டிருக்கிறது. குறைவான எடையுடன் மிக அடக்கமாக இந்த டேப்லெட் வருகிறது.
இதன் இயங்குதளம் கூகுள் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் ஆகும். இதில்
3ஜி இணைப்பு வசதிகளும் உண்டு. மேலும் இந்த டேப்லெட்டில் ஆட்டோ போக்கஸ்
மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகா பிக்சல் கேமராவும் உண்டு. அதோடு இந்த
டேப்லெட் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் வழங்குகிறது.
இந்த புதிய டேப்லெட்டைப் பற்றி மற்ற
தகவல்கள் வரவில்லை என்றாலும் இதன் படங்களைப் பார்த்து ஓரளவு ஊகிக்க
முடியும். இந்த டேப்லெட்டின் படத்தைப் பார்க்கும் போது இந்த டேப்லெட் மிக
மெல்லியதாக இருக்கிறது. இரண்டு நிறங்களில் வருகிறது. அதாவது முன்பக்கம்
கருப்பு நிறமும் பின்பக்கம் வெள்ளி நிறமும் உள்ளன. இந்த டேப்லெட்
உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதால் இது மிக உறுதியாக இருக்கும். அதே
நேரத்தில் நீண்ட ஆயுளையும் கொண்டிருக்கும்.
இந்த புதிய டேப்லெட் 3ஜி இணைப்பு
கொண்டிருப்பதால் இண்டர்நெட்டிலிருந்து அப்ளிகேசன்களை மிக விரைவாக
பதிவிறக்கம் செய்ய முடியும். இதன் மெமரி மற்றும் ப்ராசஸர் போன்ற தகவல்கள்
இன்னும் வெளிவரவில்லை. உலக மொபைல் கண்காட்சியில் எல்லா தகவல்களும்
வந்துவிடும்.
Comments