ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி?
எவ்வளவு
தான் பாதுகாப்பாக நாம் ஜிமெயிலை உபயோகித்தாலும் வளர்ந்து வரும் தொழில்
நுட்பத்தில் பாஸ்வேர்ட்களை அறிந்து பலரின் ஜிமெயில் கணக்கை
முடக்கிவிடுகின்றனர். கூகுள் அறிக்கையின் படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான
பாஸ்வேர்ட்கள் திருடப்படுகிறதாம். ஜிமெயில் சேவைகளுக்கு அனைத்திற்கும் ஒரே
ஐடி, பாஸ்வேர்ட் உபயோகிப்பாதால் ஒரு கடவுச்சொல் திருடப்பட்டால் கூட பல
கூகுள் சேவைகளையும் உபயோகிக்க முடிவதில்லை. இந்த ஆபத்திலிருந்து காக்க
உங்களின் ஜிமெயில் கணக்கு திருடப்படாமல் பாதுகாக்க 2-Step Verification
என்ற வசதி கூகுளில் உள்ளது. இதனை ஆக்டிவேட் செய்வது எப்படி என கீழே உள்ள
வழிமுறையை பயன்படுத்துங்கள்.
இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் புதிதாக ஒரு கணினியில் இருந்து உங்கள் கணக்கில் லாகின் செய்யும் பொழுது சரியாக பாஸ்வேர்ட் கொடுத்தாலும் லாகின் ஆகாது உங்கள் மொபைலுக்கு ஒரு Verification Code வரும் அதனை கொடுத்தால் மட்டுமே லாகின் ஆக முடியும். லாகின் செய்யும் பொழுது IP மாறினால் இந்த verification code கொடுத்தால் மட்டுமே ஆக்டிவேட் ஆகும். இதனால் உங்கள் கூகுள் கணக்கு பாதுகாக்க படும்.
இந்த வசதியை ஆக்டிவேட் செய்வதற்கு முன் உங்கள் கணினியில் CCleaner பயன்படுத்தி அனைத்தையும் சுத்தம் செய்து விடவும். CCleaner லேட்டஸ்ட் வெர்சன் இல்லாதவர்கள் CCleaner v3.15 இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
- முதலில் உங்கள் கூகுள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து இந்த லிங்கில் 2 Step Verfication கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து வரும் விண்டோவில் உள்ள Start setup என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்து ஒரு விண்டோ வரும் அதில் உங்கள் நாடு மற்றும் மொபைல் என்னை கொடுத்து Send Code என்பதை அழுத்தினால் உங்கள் மொபைலுக்கு ஒரு SMS வரும் அதில் உள்ள verfication code கொடுத்து Verify என்பதை அழுத்தவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
- இவைகளை சரியாக கொடுத்த பின்னர் கீழே உள்ள உள்ள Next பட்டனை அழுத்தவும். அடுத்து இன்னொரு விண்டோ வரும் அதில் உள்ள TURN ON 2-STEP VERIFICATION என்பதை அழுத்தினால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும்.
- உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் Backup Phone Number , Printable Codes என்ற மேலும் இரண்டு வசதிகள் இருக்கும்.
Backup Phone number:
ஒருவேளை மேலே நீங்கள்
கொடுத்த போன் நம்பர் வேலை செய்யும் நிலையில் இல்லை என்றால் verification
Code பெறுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் அதனை தவிர்க்க மற்றொரு மொபைல்
என்னை கொடுத்து இதில் சேமித்து வைத்து கொண்டால் ஒரு மொபைல் வேலை
செய்யவில்லை என்றாலும் மற்றொரு மொபைலில் verification code பெறலாம்.
அதிலுள்ள Add Phone number கொடுத்து மற்றொரு மொபைல் எண்ணையும் SAVE
செய்யுங்கள்.
Save கொடுத்து விட்டால் அடுத்த மொபைல் எண்ணும் உங்கள் கணக்கில் சேர்ந்து விடும்.
Printable backup codes
ஒருசில
நேரங்களில் இந்த இரண்டு மொபைல் எண்களும் வேலை செய்யாத நேரத்தில்
அவசரத்தில் உதவுவதற்காக ஒரு 10 verification code கொடுத்து இருப்பார்கள்
அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொண்டால் இது போன்ற சமயங்களில் உபயோகிக்கலாம்.
இந்த ஒவ்வொரு கோடிங்கும் ஒரு முறை தான் உபயோகிக்க முடியும்.
print
எடுத்து உங்கள் பாக்கெட்டில் வைத்து கொண்டால் அவசரத்தில் உதவும். அல்லது
Save to test file என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியிலும் சேமித்து
கொள்ளலாம். ஒருவேளை பத்து கொடிங்கையும் உபயோகித்து விட்டால் Generate new
codes கொடுத்து புதிய கோடிங் எடுத்து கொள்ளலாம்.
Comments