ISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள்(Bootable) பைல்களாக மாற்ற வேண்டுமா?


ISO பைல்களை பூட்டபிள்(Bootable) பைல்களாக மாற்றம் செய்ய நாம் நீரோ அல்லது Poweriso, MagicISO, ISO Burner இதில் எதாவது ஒரு ரைட்டிங் சாப்ட்வேரினை பயன்படுத்தியே மாற்றம் செய்வோம். ISO பைல்கள் பெரும்பாலும் அதிக அளவுடையதாகவே இருக்கும். இந்த ISO பைல்களை நாம் பெண்ட்ரைவ்களில் பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நாம் USB வழியாக பூட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளானது Freeware அப்ளிகேஷன் ஆகும்.
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த மென்பொருளை Unzip செய்துகொள்ளவும்.  IsoBurner என்பதன் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Run as Administrator என்பதை தேர்வு செய்யவும். பின் ஒப்பன் ஆகும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான தேர்வை ஒகே செய்து விட்டு Next பொத்தானை அழுத்தி பூட்டபிள் பைலை உருவாக்கி கொள்ள முடியும்.
இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் பெண்ட்ரைவுகளிளும் பூட்டபிள் பைல்களை உருவாக்க முடியும். நேரிடையாக CD/DVDக்களில் ISO இமேஜ்களை  ரைட் செய்யவும் முடியும்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய – Download

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க