அவஸ்ட் இலவச ஆன்ட்டி வைரஸ் புதிய பதிப்பு- 6.0.1125
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகபடுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்த படுகிறது. இப்பொழுது இந்த ஆண்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
- அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.
- கணினியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.
- இணையத்தில் சில மால்வேர் பாதிக்க பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.
- ஹார்டிஸ்கில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொள்வதால் கணினியின் வேகம் குறைவதில்லை.
- வேகமாக பைல்களை ஸ்கேன் செய்ய கூடியது.
- பைல் உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.
- ஸ்க்ரீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.
- கணினி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.
- E-mail Scanner. மேலும் பல வசதிகள் இதில் அடங்கியுள்ளது ஆகவே இந்த மென்பொருளை கணினியில் நிறுவி உங்கள் கணினியை பாதுகாத்து கொள்ளுங்கள்.
1632
இன்ஸ்டால் செய்யும் முறை:
- நீங்கள் இந்த ஆன்ட்டி வைரசை ஏற்க்கனவே உபயோகித்து கொண்டு இருந்தால் நீங்கள் சுலமாக இந்த அப்டேட் வெர்சனை நிறுவி கொள்ளலாம்.
- முதலில் கீழே டாஸ்க்பாரில் உள்ள அவஸ்ட் லோகோ மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Update என்பதை க்ளிக் செய்து பிறகு Program என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணினியில் புதிய பதிப்பு இன்ஸ்டால் ஆகிவிடும்.
- ஏற்க்கனவே இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை உபயோகிக்காதவர்கள் இந்த லிங்கில் க்ளிக் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொண்டு உங்கள் கணினியில் உள்ள வைரஸ்களை நீக்கி தங்கள் கணினியை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.
டுடே லொள்ளு
ஏலே கண்ணு வைக்காதிங்கப்பா அந்த பக்கம் திரும்புங்க
Comments