புத்தம் புதிய தமிழ் யுனிகோட் எழுதி மற்றும் கன்வெர்ட்டர்

கணினியில் தமிழ் எழுத நாம் பல்வேறு முறைகளை பயன்படுத்துகிறோம். பிளாக், எடிட்டர், Google tamil Input, NHM எழுதி, பாமினி எழுத்துரு போன்ற பல்வேறு முறைகளை பயன்படுத்தி தமிழில் எழுதி கொண்டிருக்கிறோம். இந்த முறையில் இன்னும் ஒரு புதிய தமிழ் UNICODE எழுதி அறிமுகப் படுதப்பட்டுள்ளது. இந்த எழுதியில் உள்ள சிறப்பம்சம் கன்வெர்டரும் இதில் உள்ளது உள்ளது. அதாவது பாமினி, அமுதம் போன்ற எழுத்துருக்களில் எழுதி அதை யுனிகோடாக மாற்றி கொள்ளும் வசதி இதில் உள்ளது.
  • இந்த வசதியை குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் பெறலாம்.
  • தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
  •  இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும்.
  • இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

உதாரணமாக thaminglish தெரிவுசெய்து vaNakkam என தட்டச்சு செய்தால் "வணக்கம்" என இரண்டாம் பெட்டியுனுள் பெறமுடியும். அதேபோல் ஏணைய விசைப்பலகை அமைப்புகளில் ( பாமினி, அமுதம், தமிழ்நெட்99 ) தட்டச்சு செய்து பெற முடியும்.

இந்த நீட்சியை குரோமில் இணைக்க - Tamil Unicode Writter
டுடே லொள்ளு
இந்த வண்டி போய் சேருமா.... சேராதா.. இங்கயே இழுத்துகிட்டு இருக்கு 
போகும்... ஆனா.. போகாது.........

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?