பல மணி நேரம் கணணியை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான மென்பொருள் ?


உங்கள் கணணி சீராக இயங்க வேண்டுமென்றால் உங்களுடைய கணணிக்கு சமச்சீரான தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும்.

நீங்கள் கணணியை அதிக நேரம் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய கணணியில் உள்ள Hardisk, Processor மற்றும் Motherboardகள் விரைவில் வெப்பமாகிவிடும்.

இதனால் உங்களுடைய கணணியின் ஆயுட்காலமும் வெகுவாக குறைகின்றது. உதாரணமாக 5 வருடம் வரை இயங்கும் தன்மையுள்ள வன்பொருட்கள் 4 ஆண்டுகள் வரையே இயங்கும்.
இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த வெப்பத்தை குறைக்க நம் கணணியில் Processor/Motherboard Cooling Fan பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் முழு பயனை நாம் அடைவதில்லை.
Speed Fan என்கிற இந்த சிறிய இலவச மென்பொருளைக் கொண்டு உங்களுடைய கணணியின் Temperature ஐ அறிந்து கொள்ளலாம். இதனால் உங்களுடைய கணணி இருக்கும் அறையின் வெப்ப அளவை குறைக்க நீங்கள் வழி வகுக்கலாம்.
அது மட்டுமின்றி இந்த மென்பொருள் நேரடியாக உங்களுடைய கணணியை கையாளும் திறன் உள்ளதால் உங்களுடைய கணணியை இது கண்காணித்து உங்களுக்கு தெரிவிக்கிறது. பல மணி நேரம் கணணியை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான ஒரு அவசிய மென்பொருள்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS