பூட்டபிள் விண்டோஸ்7 ப்ளாஷ்ட்ரைவினை உருவாக்க




கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவ பல்வேறு வழிகள் உள்ளன, கணிப்பொறியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை சீடி/டிவிடி, ப்ளாப்பி, ப்ளாஷ்ட்ரைவ், ஈத்தர்நெட் போன்ற வழிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இதில் பெரும்பாலும் சீடி/டிவிடிக்களை பயன்படுத்தியே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவுகிறனர். ப்ளாப்பியானது காலபோக்கில் மறைந்து விட்டது, தற்போது ப்ளாப்பியினை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் ஈத்தர்நெட் மூலமாக ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவ முடியும். ப்ளாஷ் ட்ரைவினை பயன்படுத்தி எவ்வாறு கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவுவது என்று கீழே பார்ப்போம். நம்முடைய நண்பர்களின் கணினியில் சீடி/டிவிடி ட்ரைவானது இருக்காது, இல்லை பழுதடைந்து இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த கணினியில் ப்ளாஷ் ட்ரைவ் மட்டுமே இயங்கும். அந்த நிலையில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டுமெனில் என்ன செய்வது, ஒரே வழிதான் ப்ளாஷ் ட்ரைவ் மூலமாக மட்டுமே கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ முடியும். இல்லையெனில் புதியதாக சீடி/டிவிடி ட்ரைவை கணினியில் இணைத்து ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டும். சில நாட்களுக்கு முன்பு வாசகர் ஒருவர் பெண்ட்ரைவினை பயன்படுத்தி கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவுவது என்று வினவினார். இதோ அதற்கான பதில்.

முதலில் Windows 7 USB/DVD Download tool என்ற மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி



பின் மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Source file என்ற இடத்தில் விண்டோஸ்7 இமேஜ் பைலை தேர்வு செய்யவும். குறிப்பு ISO பைலாக மட்டுமே இருக்க வேண்டும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் USB device என்பதை தேர்வு செய்யவும். DVD யில் பூட்டபிள் பைலை உருவாக்க வேண்டுமெனில் DVD என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் USB device னை தேர்வு செய்துகொண்டு Begin copying என்ற பொத்தானை அழுத்தவும்.


அடுத்து சில நொடிகளில் ப்ளாஷ்ட்ரைவில் பைல்கள் காப்பி செய்யப்படும். பைல்கள் அனைத்தும் முழுமையாக காப்பியாகும் வரை காத்திருக்கவும்.


அவ்வளவுதான் உங்களுக்கான பூட்டபிள் பெண்ட்ரைவ் தயாராகிவிட்டது. இதை பயன்படுத்தி நீங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள முடியும். விண்டோஸ்7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இனி கணினியில் எளிமையாக நிறுவிக்கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?