உலகில் தலைசிறந்த ஹக்கர்கள்(Hackers) யார் என பார்ப்போமா? – பாகம் 01

ஹக்கர்கள்(Hackers) எனப்படுபவர்கள் பாதுகாக்கப்பட்ட கணனியோ அல்லது ஒரு பாதுகாக்கப்பட்ட ஸ்தாபனத்தின் வலையமைப்புக்குள்ளோ அத்துமீறி நுழைந்து தகவல்களை திருடுபவர்களை அல்லது தனது திறமையை நிறுபிப்பதற்காக இவ்வாறான அத்துமீறல் நடவடிக்கைகளை மேற்கொள்வர்களை ஹக்கர்ஸ் என் அழைக்கின்றோம். ஹக்கர்களும் கணனியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற வல்லுனர்களே எனினும் அவர்களது நோக்கம் தவறானதாக காணப்படுகின்றது.
சரி இதுவரையில் உலகில் நடாந்த ஹக்கிங்களில் சிறந்த ஹக்கர்கள் யார் என் பார்ப்போம்.

Gary McKinnon
இவர் சாதரணமானவரல்ல அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் நாசாவின் முழு சிஸ்டத்தினையும் ஹக் பண்னியுள்ளார். இவரினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் தொகை US$700000 ஆகும். இவரிற்கு தண்டனையாக நீதிமன்றம் சேதத்திற்கான அபராத தொகையை செலுத்துமாறு கட்டளையிட்டது.
Jonathan James
இவர் தான் உலகிலேயே சிறு வயது ஹக்கர். இவர் 16வயதில் செய்தது சிறிய விடயமல்ல அமெரிக்க இராணுவ இரகசியங்களான 3300மின்னஞ்சல்களை திருடியது மட்டுமல்லாமல் நாசாவின் 13கணனிகளில் இருந்து தகவல்களை திருடியுள்ளார். இவரது இவ் நடவடிக்கையினால் அமெரிக்காவின் நாசாவின் முழு நடவடிக்கையாள் சிறு நேரம் தடைப்பட்டது. இவரினால் ஏற்பட்ட நட்டம் US$41000 ஆகும். சிறு வயதில் ஹக்கிங் செய்ததற்கான சிறைக்கு சென்ற முதல் நபரும் இவரே ஆகும்.
Adrian Lamo
இவரை ஒரு பாதுகாப்பான ஹக்கர் என்றே கூற வேண்டும். ஏனெனில் இவர் ஹக்கிங் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியது தேநீர் கடைகளின் மற்றும் வாசிகசாலை கணனிகளையே ஆகும். இவர் ஹக் செய்தது அமெரிக்காவின் நியு யோர்க் டைமிஸ் பத்திரிகையின் சிஸ்டம்களை ஆகும். இவரிற்கு இதனால் US$65000 அபராதமும் ,சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. எனினும் இன்று இவர் புகழ் பெற்ற பத்திரிகையாளராகவும் விருது பெற்ற பேச்சாளராகவும் காணப்படுகின்றார்.
Kevin Mitnick
அமெரிக்காவின் வராலற்றில்; அதிகம் வேண்டப்பட்டவர் கெவின் ஆகும். இவரை மையமாக வைத்து Freedom Downtime and Takedown என இரு படங்களும் எடுக்கப்பட்டுள்ளது. கெவின் சிறு வயதிலிருந்தே பல ஹக்கிங் நடவடிக்கைகளில் மேற்கொண்டுள்ளார். இவரிற்கு கிடைத்த தண்டைனியின் பின். இன்று இவர் இவரின் வேலை கணனி பாதுகாப்பு ஆலோசகர் பற்றும் போச்சாளர்(திருடனை பிடித்து பொலிஸ் வேலை கொடுத்திருக்காங்க) ஆகும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?