இனி எந்தப் பெயரிலும் Domain Name உருவாக்கலாம்.


 

.com .net . in உங்கள் வெப்‌ஸைட் பெயரை பார்த்து என்று கண்கள் சோர்வாகிவிடானவா ? இனி உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரிலோ உங்கள் வெப்‌ஸைட் டொமைன் பெயரினை அமைத்துக் கொள்ளலாம்.
இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.அப்படியானால் உங்கள் நிறுவனத்தின் பெயரை கொண்டு முடியும் வெப்‌ஸைட் பெயரினை நீங்களே தேர்வு செய்யலாம். உதாரணமாக tamil.movie, bikes.apache cars.suzuki , laps.dell என்று பெயரை தேர்வு செய்து கொள்ள முடியும்.
இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படும் என்றாலும், குழப்பத்துக்கும் பஞ்சமிருக்காது..com என்ற சிம்பிளான பெயரில் தங்களது இணையத்தளம், துணைத் தளங்களை எல்லாம் எளிதாக பதிவு செய்த நிறுவனங்கள் இனிமேல் தங்களது நிறுவனத்தின் பெயரில் ஏராளமான டொமைன்களை பதிவு செய்ய வேண்டிய நிலை வரலாம். இதற்கான செலவும் அதிகமாகும்.
பெயர் தேர்வு செய்வதில் குழப்பம் வரலாம் என்றாலும் பெயரினை வாங்குவதற்கான போட்டிகளும் கடுமையாகும் அபாயம் இருக்கிறது.அதே போல நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து, டொமைனை பிளாக் செய்து வைத்துக் கொண்டு, அதை மூச்சு முட்டும் விலைக்கு விற்க முயலும் ஆசாமிகளிடம் நிறுவனங்கள் சிக்கித் தவிப்பதும் அதிகரிக்கும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?