C++ Programing Language-ஓர் அறிமுகம்


C++ புரோகிராமிங் மொழி, C புரோகிராமிங் மொழியினை அடுத்து வந்த ஓர் பொதுவான புரோகிராமிங் மொழியாகும். இது High Level Programming மற்றும் வன்பொருட்களை கையாளும் Low Level Programing ஆகிய இரண்டையும் ஆதரிப்பதால் இது ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்டும் (அதாவது இந்தவரியில் இந்த நிரலாக்கம் தான் COBAL நிரலாக்க மொழி போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. பொதுவாக C++  நிரல்கள் கம்பைல் செய்யப்படும். இவ்வாறு கம்பைல் பண்ணப்படும்போது அக்கணினியை இலக்கு வைத்த இயந்திரமொழிக்குக் கொண்டுவரப்படும். C++ மொழி 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் AD & D பெல் ஆய்வுக் கூடத்தில் ஜோன் ஸ்ட்ரௌஸ்ட்ரப் என்பவரால் உருவாக்கப்பட்டது.
அமெரிக்க பெல் ஆய்வுகூடத்தில் பணியாற்றிய பிஜார்னி ஸ்டோரப் C மொழியை மேம்படுத்தும் முகமாக 1979 ஆம் ஆண்டில் வகுப்புகளுடன் கூடிய  C with Classesஆக விருத்தி செய்தார். இது 1983 ஆம் ஆண்டில் C  மொழியில் வரும் ++ ஆனது increment operator ஐக் குறிக்கும் வகையில் இதுவும் C++ என மாற்றப்பட்டது.
இன்றைய மென்பொருட் துறையில் C++ன் பங்களிப்பு வெகுவாக காணப்படுகின்றது. Java புரோகிராமர்களுக்கு அடுத்து C மற்றும் C++ புரோகிராமர்ககு மிகுந்த கிராக்கி காணப்படுகின்றது.


Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க