Posts

Showing posts from July, 2014

கணனி பற்றி அறிய ஆர்வமா

Image
Mother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட். இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் 0அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன.  Hard Disk : (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.  Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அள...

இந்திய மொபைல் சந்தையில் களமிறங்கும் கூகுள்

Image
    இந்திய மொபைல் போன் சந்தையை இலக்காக்க் கொண்டு கூகுள் அதிரடியாக இதில் இறங்கத் தயாராகி வருகிறது. சென்ற சில ஆண்டுகளாக, இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட் போன்களின் விற்பனையும் பயன்பாடும் இந்தியாவில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. தொழில் நுட்ப ரீதியாகவும், இந்த சிஸ்டத்தில் கிடைக்கும் வசதிகள், வாடிக்கையாளர்களின் மனங்களைக் கவர்ந்து வருகின்றன. எனவே, இதன் அடிப்படையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்களை வடிவமைக்க, இந்திய மொபைல்போன் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கென சுமார் 100 கோடி டாலர் திட்டச் செலவில், பெரிய திட்டம் ஒன்றினை செயல்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. ”இதற்கு ஆண்ட்ராய்ட் ஒன்” (Android One) எனப் பெயருட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்திய மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், கார்பன், ஸ்பைஸ், செல்கான், இண்டெக்ஸ் மற்றும் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, ரூ.6,000க்குள்ளான விலையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறத...

ANDROID மொபைலில் இருக்க வேண்டிய சில முக்கியமான APPLICATIONS – பகுதி ???

Image
ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது . அதுபோலவே அதில் பயன்படுத்த கூடிய நிரல்கள் (அப்ளிகேஷன் ) எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது . லட்சகணக்கான அப்ளிகேஷன்களில் நமக்கு எதுதேவை என கண்டறிந்து எடுப்பதே பெரிய வேலைதான் . இந்த பதிவில் சில முக்கியமான அப்ளிகேஷன்கள் பற்றி உங்களுக்காக ... 1. GOCRICKET இது IPL சீசன் , கிரிகெட் ஆட்டங்களை நேரில் பார்க்கவும் , அல்லது ரன் பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் உதவும் அப்ளிகேஷன் இது . நிறைய அப்ளிகேஷன்கள் இதுபோல இருந்தாலும் இதில் பல விஷயங்கள் உள்ளது . ஆட்டோ ரெப்ரெஷ் , ஹைலைட் என பல உள்ளது . FOR DOWNLAOD: CLICK HERE  2. LADOOO இது மற்ற அப்ப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்ய உதவும் . இதில் முக்கியவசதி நீங்கள் தரவிறக்கம் செய்யும் அப்ளிகேஷங்களுக்கு உங்களுக்கு இது பணம் தரும் . குறைந்தது 10 ரூபாய் வந்ததும் நீங்கள் உங்கள் என்னிருக்கு ரீ-சார்ஜ் செய்துகொள்ளமுடியும் . அப்ளிகேஷனும் தரவிரக்கியது போல ஆச்சு ,பணமும் சம்பாதித்தது போல ஆச்சு . இதுக்கான ரெபரல் கோடு : 1686961149 FOR DOWNLAO...

பிடிஎப் பைலில் உள்ள புகைப்படங்களை பிரித்தெடுக்கலாமா..?

Image
சில முக்கியமான பைல்கள், புத்தகங்கள், குறிப்புகள் பிடிஎப் வடிவில இருக்கும். அதில் உள்ள படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். ஒன்றிரண்டு படங்கள் தேவைப்பட்டால் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். புத்தகத்தில் உள்ள அனைத்துபடங்களும் தேவையென்றால் அதற்கு காலதாமதம் ஏற்படும். அவ்வாறு படங்களை மட்டும் விரைந்து பதிவிறக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 MB கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான இடத்தினை தேர்வு செய்ததும் உங்களுக்கான படம் உள்ள பக்கத்தினையோ அல்லது முழு புத்தகத்தினையோ தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். தேவையான ஆப்ஷன்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்துகொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் படம் எந்த பார்மெட்டில் தேவையோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். அனைத்து பணிகளும் முடிந்ததும இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். இறுதியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆ...

ON-LINE இல் பொருட்கள் வாங்க 6 சிறந்த தளங்கள்

Image
இப்போது பலர் ஆன் லையனில் பொருட்கள் வாங்குவதை விருப்பமாக கொண்டுள்ளனர் . காரணம் அலைச்சல் மிச்சம் , பலவகையான பொருகளை பார்த்துவான்கலாம் . நாம் விரும்பும் நேரத்தில் ஆடர் செய்யலாம் . பணத்தை செலுத்த பலவழிகள் உள்ளது என பல நன்மைகள் உள்ளது . எனவே ஆன் லையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது . அப்படி வாங்க பலதளங்கள் உள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம் . 1.AMAZON.IN இப்போது மிகவும் பிரபலமாகிவரும் தளம் இது . இதில் இல்லாத பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு அனைத்துவகை பொருட்களும் கிடைகிறது . நன்மைகள் : CASH ON DELIVERY (COD) வசதி இதில் உண்டு . நீங்கள் விரும்பிய பொருளை பெற்ற பின் பணத்தை கொடுத்தால் போதும் . இதனால் பணத்தை கட்டி ஏமாறும் கஷ்டம் இல்லை . எப்பொழுது வேண்டுமானாலும் ஆடரை கேன்சல் செய்யலாம் . உங்களுக்கு பார்சல் கையில் வந்த பின்பு வேண்டாம் என கூட திருப்பி அனுப்பலாம் . பார்சல் இப்போது எந்த இடத்தில் உள்ளது என அறிந்துகொள்ளும் வசதி . SMS, E-MAIL மூலம் உங்கள் பொருள் இப்போது எங்கு உள்ளது என தகவல் வரும் . 24 மணி நேர கஷ்டமர் கேர் உதவி . இந்த தளம் செ...

ப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் Android Application

Image
நாம் அதிகமாக நமது போனில் உள்ள போட்டோ, படங்கள், மற்ற அப்ப்ளிகேஷன்களை மற்றவர்களுடன் பகிர பயன்படுத்துவது ப்ளூடூத் தான் . இது வசதியான ஒன்றாக இருந்தாலும் வேகம் குறைவுதான் . இந்த கஷ்டத்தை போக்க ஒரு அருமையான ஆண்ட்ராயட் அப்ளிகேஷன் உள்ளது . அதை பற்றிதான் பார்க்கபோகிறோம் . ANY SHARE : அந்த அருமையான அப்ளிகேஷன் பெயர் ANY SHARE . இதை உங்கள் போனிலும் , உங்கள் கோப்புகளை யாருக்கு மாற்ற வேண்டுமோ அவர் போனிலும் நிறுவ வேண்டும் .இப்போது இருவரும் தங்கள் கோப்புகளை மிக எளிதில் மாற்றிகொள்ளலாம் . நன்மைகள் : * WI-FI மூலம் கோப்புகள் மாறுவதால் விரைவாக மாறும் . * சாதரணாமாக ப்ளூடூத் மூலம் அனுப்புவதைவிட 60 மடங்கு வேகத்தில் அனுப்பலாம் . * SEND- RECEIVE வசதிகள் * பயன்படுத்த எளிதானது * மிக விரைவானது * மெமரி கார்ட் மற்றும் போன் மெமரியில் இருந்து கோப்புகளை அனுப்பலாம் . * ஒரே நேரத்தில் பல கோப்புகளை அனுப்பலாம் . * பெரிய அளவுள்ள கோப்புகளை எளிதாக மாற்றலாம் . படங்களை  (MOVIES)அனுப்புவது எளிது . இதை தரவிறக்கம் செய்ய : for download - link -1 இதை தரவிறக்கம் ச...

எம்.எஸ். ஆபீஸ் குறுக்கு வழி கட்டளைகள்

Image
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளி -கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன. வேர்ட் தொகுப்பு: Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது. Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய இடைக்கோட்டினை அமைக்கிறது. இதனால் ஹைபன் அமைக்கப்பட்ட இரு சொற்களும் பிரிக்கப்பட மாட்டா. Ctrl + T: பாராக்களை ஒரு ஹேங்கிங் இன்டென்ட் எனப்படும் முன் இடைவெளியிட்டு அமைக்கிறது. Ctrl + Shift + T: மேலே சொன்ன பாரா ஹேங்கிங் இன்டென்ட் இருப்பின் அதனை நீக்குகிறது. எக்ஸெல் தொகுப்பு: Shift + F11 : அப்போதைய ஒர்க் புக்கில் புதிய ஒர்க் ஷீட் ஒன்றை இணைக்கிறது. Alt + Shift + F1 : மேலே சொன்ன அதே வேலையை மேற்கொள்கிது. ஆம், இந்த இரண்டு ஷார்ட்கட் கீகளும் ஒரே வேலையைச் செய்கின்றன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அவுட்லுக்: Ctrl + Shift + H: கர்சருக்கு வலது பக்கம் உள்ள சொல்லை அழிக்கிறது. Ctrl + F: தேர்ந்தெ...

எக்ஸெல்லில் பெர்சனல் தகவல்களை மறைப்பது எப்படி

Image
    எக்ஸெல் தொகுப்பில் புதிய ஒர்க்ஷீட்களை உருவாக்கி, அவற்றில் டேட்டாவினைப் பதிகையில், அந்த ஒர்க்ஷீட் பைலில், நம்முடைய பெர்சனல் தகவல்களும் இணைக்கப்படுகின்றன. பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வகையில் இவை பதியப்படும். இதனால், பைல் ஒன்றை யார் உருவாக்கியது போன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரிய வரும். இந்த தகவல்களை ஒவ்வொரு பைலின் ப்ராப்பர்ட்டீஸ் சென்று நீக்கலாம். ஒவ்வொரு பைலாக இதனை மேற்கொள்வதைக் காட்டிலும், ஒர்க்ஷீட்கள் உருவாகும்போது இத்தகைய தகவல்களை இணைக்காமல் இருக்க செட்டிங்ஸ் மேற்கொள்ளலாம். இதற்கு Tools >Options என முதலில் தேர்ந்தெடுக்கவும். இங்கு Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்குள்ள டேப்களில் Security டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் விண்டோ பிரிவில் Remove Personal Information from File Properties on Save என்று இருப்பதைப் பார்த்து, அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்து அனைத்தையும் மூடவும். இனி பெர்சனல் தகவல்கள் சேர்க்கப்பட மாட்டா. எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்கள், கீழே குறிப்பிட்ட வழிகளில் செயல்படவும். இந்த தொகுப்பில் Document Ins...

விண்டோஸ் 8 - முக்கிய ஷார்ட் கட் கீ செயல்பாடுகள்

Image
 விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு, விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவிலிருந்து வந்தவர்களுக்குப் பல விஷயங்கள் புதிதாகவே தெரிகின்றன.  இவற்றைக் கற்றுக் கொண்டு, நினைவில் வைத்துக் கொண்டு இதில் செயல்பட வேண்டியுள்ளது.  குறிப்பாக விண்டோஸ் கீயுடன் ஷார்ட் கட் கீகள் பயன்படுத்துவதில் பல செயல்பாடுகளும் அவற்றிற்கான கீ தொகுப்புகளும் புதியதாக, எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியனவாகவும் உள்ளன.  அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. Windows Key + X -  கண்ட்ரோல் பேனல், டாஸ்க் மானேஜர், பைல் எக்ஸ்ப்ளோரர் மற்றும் கமாண்ட் ப்ராம்ப்ட் ஆகியவற்றுடன் அடங்கிய மெனு ஒன்று பாப் அப் ஆகி, நாம் தேர்வு செய்திடத் தயாராய் கிடைக்கும்.  2. Windows Key + Q  அப்ளிகேஷன் சர்ச் டூல் ஒன்று நமக்குக் கிடைக்கும். நாம் இன்ஸ்டால் செய்திட்ட அனைத்து சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களிலும் நமக்குத் தேவையானதைத் தேடிக் கண்டறியும் திறனை இது வழங்குகிறது. 3. Windows Key + C  விண்டோஸ் 8 சிஸ்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சார்ம்ஸ் மெனு (charms menu) வினை இது த...

விண்டோஸ் 8ல் தொடு உணர் திரை இயக்கத்தை நிறுத்த வேண்டுமா

Image
    விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், பல நேரங்களில், அதன் தொடு உணர் திரை இயக்கத்தை நிறுத்தி, மவுஸ் மற்றும் கீ போர்ட் வழியாக இயக்க விரும்புவார்கள். ஆனால், டச் ஸ்கிரீன் இயக்கத்தினை நிறுத்தி வைக்க, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் எந்த விதமான வசதியும் செய்து தரப்படவில்லை. ஆனால், சில செயல்முறை வழிகளை மேற்கொள்வதன் மூலம், இதனை மேற்கொள்ளலாம். 1. "Charm Menu” வினைத் திறந்து, "Device Manager” தேடவும். கிடைக்கவில்லை என்றால், தேடலுக்கான சொல்லை "Settings” என அமைக்கவும். 2. டிவைஸ் மேனேஜர் கிடைத்தவுடன், உங்கள் கம்ப்யூட்டரின் பெயர் கூறும் டேப்பினை விரிக்கவும். இங்கு "Human Interface Devices” என்பதனைக் கண்டறிந்து அதனை விரிக்கவும். 3. இப்போது பல "HID compliant device” பட்டியலிடப் பட்டிருப்பதனைக் காணலாம். சில கம்ப்யூட்டர்கள், இதனை HID Compliant Touch Screen என பெயரிட்டிருப்பதனைக் காணலாம். டச் ஸ்கிரீன் ஆப்ஷன் இருப்பது கிடைக்கவில்லை எனில், ஒவ்வொரு HID Compliantபிரிவிலும் பார்க்கவும். ஏதாவது ஒன்றில் இது கிடைக்கும். அதில், விசை இயக்கத்தினை நிறுத்தி வைக்க விரும்புகிறீர்கள...

பேஸ்புக்கில் புத்தம் புது வசதி அறிமுகம்

Image
    பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் அதன் யூசர்களை விளம்பரதாரர்களுடன் இணைக்க உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோரின் வசதிக்காக,புதிய பட்டன் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டனை கிளிக் செய்த உடன் பிராண்ட் விளம்பரதாரருக்கு அழைப்பு சென்றுவிடும், பின்னர் அவர்களிடமிருந்து மறு அழைப்பு பெறுவதற்காக ஒரு புதிய வகை சோதனையில் இணையதள சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மறு அழைப்பு பெறும்போது ஷாப்பிங் தள்ளுபடி பற்றிய அனைத்து தகவல்களையும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆடியோவின் மூலம் வழங்குகிறது. இதனை 'மிஸ்டு கால்' விளம்பரம் என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் சோதனையிட்டு பின்னர் மற்ற சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பேஸ்புக் யூசர்கள் உள்ளதால், இந்த மிஸ்டு கால் விளம்பர சேவையை அறிமுகப்படுத்தி பேஸ்புக் நிறவனத்தின் ஒட்டுமொத்த வருவாயை அதிகரிக்க பிரேசில், இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த விளம்பர சேவையை சோதனையிட உள்ளது. பேஸ்புக்கில் 8...

டூயல் பூட்டிங் சிஸ்டம் பற்றி தெரியுமா

Image
ஒரு கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்து இயக்கலாம். இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம்.    இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா என இரண்டு மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நிறுவிப் பயன்படுத்தலாம். இதனை நீங்களே பதிந்து இயக்கலாமா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் சொல்வேன்.    Boot loader என்ற புரோகிராம் மூலம் நீங்களே இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை பதிந்து இயக்கலாம். என்ன செய்யப் போகிறோம் என்பதனை நன்கு உணர்ந்து படித்து அறிந்து கொண்டு செய்வது நல்லது. எதற்காக இந்த டூயல் பூட் வசதி? நல்ல கேள்விதான். வேலியில் போற ஓணான் கதையாக இது ஆகக் கூடாது அல்லவா! எனவே இதனையும் தெளிவு செய்து கொள்வது நல்லது. நீங்கள் ஏற்கனவே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி அதனுடன் நல்ல பரிச்சயம் கொண்டிருக்கிறீர்கள்....