ரகசியங்களை திருடும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு – உஷார்..!

டெபிட் கார்டு வந்த பிறகு, அதை பயன்படுத்திதான் பெரும்பாலானோர் ஷாப்பிங் செய்கின்றனர். பிக்பாக்கெட் பயமில்லை, பாக்கெட் கனமில்லை என்ற கூடுதல் தெம்பும் வந்து விடுகிறது. இப்படி ஒருபுறம் வசதி இருந்தாலும், இன்னொரு புறம் தொழில்நுட்ப வளர்ச்சி நம் செயல்களை எளிதாக்கி கொண்டிருக்க, ஸ்கிம்மர் மெஷின், பிஷ்ஷிங் என நவீன முறையில் திருட்டுகள் அமோகமாக நடக்கின்றன. 

கடைகளில் கார்டு பயன்படுத்தி பொருள் வாங்குவது போல, ஆன்-லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இதுபாதுகாப்பு இல்லாதது என்று தெரிந்தாலும், வசதி கருதி பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கடைகளில் பொருள் வாங்கும்போது கார்டு மூலமான பண பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக ஆக்கும் வகையில், டெபிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்டு எண் பயன்படுத்துவதை ரிசர்வ் வங்கி கட்டாயம் ஆக்கியது. இருப்பினும் இணையதள திருடர்கள் புதுப்புது ரூபத்தில் தங்கள் வேலையை காட்டிக்கொண்டுதான் உள்ளனர். 

எனவேதான், இணையதள தாக்குதல்களுக்கு அதிகம் ஆளாகும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இணையதள பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும், முழுவதுமாக இதை கட்டுப்படுத்த முடிவதில்லை. இப்படிப்பட்ட நிலையில், டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவரின் கணக்கு ரகசிய விவரங்களை திருடும் வைரஸ் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

‘‘டெக்ஸ்டர்’’ என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸ், கடைகளில் கார்டு உரசும்போது அந்த கார்டில் உள்ள கார்டுதாரரின் பெயர், கணக்கு எண், காலாவதி தேதி, சிவிவி எண் மட்டுமின்றி ரகசிய குறியீட்டு எண்ணையும் திருடி விடுகிறது. எனவே, பிஷ்ஷிங் மெயில் போன்றவை குறித்து உஷாராக இருக்க வேண்டும். பொது இடங்களில் உள்ள ஒயர்லெஸ் நெட்வொர்க்குகள், பொது இணையதள மையங்களில் பண பரிவர்த்தனை செய்வதை தவிர்க்க வேண்டும் என அவசர நிலைக்கான இந்திய கணினி செயல்குழு (சிஇஆர்டி) அறிவுரை கூறியுள்ளது.

நீங்க என்ன செய்யணும்?
பண பரிவர்த்தனை பாதுகாப்பு விஷயத்தில் நாம் கூடுதலாக கவனம் செலுத்தினால் போதும். பாதுகாப்பதும், அதை நழுவ விடுவதும் நம் கையில்தான் உள்ளது. உங்கள் டெபிட் கார்டுக்கான தனிநபர் அடையாள எண் (பின்) கேட்கும் வியாபார மையங்களில், ஸ்கிம்மிங் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

பின் நம்பர் அழுத்தும் இடத்திலும், கார்டு உரசும் இடத்திலும் வித்தியாசமாக எதாவது பொருத்தப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர். என்னதான் நவீன வசதிகள் வந்தாலும், கையில் பணம் கொடுத்து வாங்கினால்தான் பாதுகாப்பு என்று பழைய நடைமுறைகளையே பயன்படுத்துபவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

நன்றி 

Comments

GG said…
Thanks for your valuable comment Manikandan Pachamuthu..! :-)

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?