இரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து ஆகாஷ் கணினி உலக சாதனை
ஆகாஷ்
டேப்லேட் கணினிகளை பற்றி அறிந்து இருப்பீர். உலகிலேயே மிகக் குறைவான
விலையுள்ள டேப்லேட் கணினி முதன் முதலாக இந்தியாவில் Datawind நிறுவனம்
வெளியிட்டுள்ளது. முதலில் Rs.2500 க்கு இதன் முதல் பதிப்பு வெளியாக
அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. இதன் அடுத்த வெர்சனான Ubislate 7 இந்த
மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி
உள்ளதால் பெருமாலானவர்கள் இந்த கணினிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து
வருகின்றனர். இதன் மூலம் Datawind நிறுவனமே எதிர்பார்க்காத வகையில்
ஆர்டர்கள் குவிகிறது. முன்பதிவு ஆரம்பித்த இரண்டே வாரத்தில் 14லட்சம்
கணினிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சராசரியாக
ஒரு நாளைக்கு 1,00,000 கணினிகள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது
உலகளவில் மிகப்பெரிய சாதனை ஆகும். இதற்க்கு முன் ஆப்பிள் நிறுவனத்தின்
iPad நான்கு வாரத்தில் 1,000,000 விற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. ஆகாஷ்
இந்த இமாலய இலக்கை இரண்டே வாரத்தில் முறியடித்து விட்டது.
இவ்வளவு ஆர்டர்களை எதிர்பார்க்காத Datawind நிறுவனம் இன்ப
அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. இந்த முன்பதிவு எண்ணிக்கை நாளுக்கு
நாள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் கொச்சின்,நொய்டா மற்றும் ஹைதராபாத் என
இந்தியாவில் மூன்று உற்பத்தி நிறுவனங்களை தொடங்க உள்ளது.
மிக மலிவான விலையில் கிடைப்பதாலும் சிறந்த வசதிகள் இருப்பதாலும்
இவ்வளவு கணினிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிக விலை கொடுத்து
வாங்கும் டேப்லேட் கணினிகளோடு இதனை ஒப்பிட்டு பார்த்து இதன் தரம் சரியில்லை
என கூறுவது ஏற்புடையதல்ல. சாதரணமாக Android OS கொண்ட மொபைல் போன்கள் 5
ஆயிரத்திற்கும் அதிகமாக விற்கும் நிலையில் அதை விட அதிக வசதிகள் கொண்ட இந்த
கணினிகள் Rs. 2999 க்கு கிடைப்பது பாராட்டுக்குரியது தான் என்பது என்னுடைய
எண்ணம்.
இந்த Ubislate7 கணினியின் வசதிகளை விவரமாக அறியவும் முன்பதிவு செய்யும் வழிமுறையை அறியவும் இந்த பதிவிற்கு ஆகாஷ் கணினியின்(Tablet) அடுத்த வெர்சன் UBISLATE 7 முன்பதிவு செய்ய செல்லுங்கள்.
Comments