கணிப்பொறி வைத்திருக்கும் அனைவரும் ஜாக்கிரதை(OPERATION GHOST CLICK)
ஜூலை
மாதத்திற்குள் குறைந்தது முன்று லட்சத்திற்கும் மேலானோர் இணைய இணைப்பு
இல்லாமல் பாதிக்கபடுவர்கள் என அமெரிக்காவின் FBI எச்சரித்து உள்ளது.
நவம்பர் 8 "OPERATION GHOST CLICK" என்ற பெயரில் சில வைரஸ் பரப்பிகளை
FBI,NASA-OIG AND ஈஸ்தனியம் போலீஸ் கைது செய்து உள்ளது.அவர்கள் சில DNS
CHANGER,TDSS,ALUREON,TIDSERV மற்றும் TDL4 போன்ற வைரஸ் அனுப்பி உள்ளனர்.
DNS CHANGER எனப்படும் வைரஸ் பரப்பியவர்கள் பல லட்சம் டாலர் பணத்தை இதன்
முலம் சம்பாதித்து உள்ளனர்.இந்த வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர் முலம்
இணையத்தில் செல்கையில் இந்த வைரஸ் நாம் காண விரும்பும் தளத்திற்கு பதிலாக
வேறு ஒரு தளத்திற்கு நம்மை இழுத்து செல்லும் அங்கே நம் ஆசையை தூண்டும்
விதத்தில் வாசகம் இருக்கும்( CLICK TO WON $1000000) அதை கிளிக் மாற்றி
கொள்பவரின் USERNAME AND PASSWORD திருடப்பட்டு பணமோசடியும் நடைபெறும்.இது
வரை மேற்கொள்ளப்பட்ட மோசடியின் மதிப்பு $40 லட்சம் என FBI மதிப்பிட்டு
உள்ளது.
இந்த மால்வேர் பாதிப்பை நிக்கும் சேவையை FBI தனியாக ஒரு தளம் அமைத்து
தருகிறது.அப்படியும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் மூன்று லட்சம்
பேர் இதனால் பாதிப்பு அடைந்தவர்களாய் இருப்பார்கள்.ஜூலை மாதத்தில் இருந்து
இந்த மால்வேர் பாதிக்க பட்டவர்களால் தங்கள் விரும்பிய தளத்திற்கு செல்ல
முடியாது.
உங்கள் கணிப்பொறியை செக் செய்யும் போது பச்சை வண்ணத்தில் இருந்தால் உங்கள்
கணிப்பொறி இன்னும் அந்த மால்வேர் பாதிக்கபடவில்லை.ஒரு வேலை பாதிக்கபட்டு
இருந்தால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும்...
நன்றி:-தினமலர்
Comments