கணினியில் இந்திய ரூபாய் குறியீட்டைக் கொண்டுவர..
How to type Indian rupee symbol in computer?
வணக்கம் நண்பர்களே...! இந்திய ரூபாய் குறீயீட்டை குறிக்கும் வகையில் இந்திய அரசு இந்திய ரூபாயைக் குறிக்கும் குறியீட்டை வெளியிட்டது. கடந்த நாட்களில் வெளியிடப்பட்ட இந்தக் குறியீட்டை கணினியில் எப்படி தட்டச்சு செய்வது என நிறையபேர் குழம்பி போயினர்.. பிறகு பலரும் பல வகைகளில் இதற்கு தீர்வு கண்டனர்.. அவற்றில் நாம் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள முறை பயன்படுத்த மிகச் சுலபமாக இருக்கிறது. நண்பர் சிவக்குமார் ஈரோடு அவர்கள் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு இக்குறியீட்டை எப்படி பயன்படுத்துவது எனக் கேட்டிருந்தார். அவருக்காகவும், புதிய நண்பர்களுக்காகவும் இப்பதிவு....
இந்திய ரூபாயின் குறியீட்டை கொண்டுவருவதற்கு முன்பு அவற்றை உருவாக்கியவரைப் பற்றியும் அதன் அர்த்தத்தையும் பற்றியும் தெரிந்துகொள்வோம்..
இந்திய ரூபாய்க் குறியீட்டை உருவாக்கியவர்:
இந்திய ரூபாயின் குறியீட்டை உருவாக்கியவர் சென்னையைச் சேர்ந்த உதய குமார் என்பவர். இவர் பழங்கால தமிழ் எழுத்துமுறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். இந்த ஆய்வுகளே தனது இந்திய ரூபாய் குறியீட்டின் வடிவமைப்புக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.
இந்திய அரசு மார்ச் -5 , 2009 ம் வருடம் இந்திய ரூபாய் குறியீட்டை உருவாக்குவதற்கான போட்டியை அறிவித்தது. இறுதியில் ஐந்து பேர் வடிவமைத்தக் குறீயீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமாரின் வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இவர் தற்போது குவாஹாட்டியில் உள்ள ஐஐடி-யில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்திய ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்து கொடுத்ததன் மூலம் இவர் உலகளவில் புகழ்பெற்றுள்ளார். . அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் வடிவமைப்பு பிரிவில் பட்டம் பெற்ற மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்தான் இந்த உதயகுமார்.
இந்திய ரூபாய்க் குறியீட்டைக் கணனியில் கொண்டுவர...
இந்த இணைப்பில் சென்று இந்திய ரூபாய் குறீயீட்டிற்கான எழுத்துருவை டவுன்லோட் செய்துகொள்ளவும்.
குறிப்பு: இந்த எழுத்துருவானது யுனிக்கோட் எழுத்துரு அல்ல. மேலும் இந்த எழுத்துருவைப் பயன்படுத்தி தட்டச்சிட்ட கோப்புகள் அனைத்தும் , மற்ற கணினியில் திறந்து பார்க்கும்போது ரூபாய்க்குறியீட்டைக் காண முடியாது. மற்ற கணினிகளிலும் இந்த எழுத்துருவை நிறுவிய பின்னரே குறீயீடு தோன்றும்.
|
Comments